அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் இருந்து மன்னார் வந்த தனியார் பேருந்து மடு வீதியில் விபத்து.5 பேர் காயம்.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மடு வீதி பரயனாலன் குளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் விபத்திற்குள்ளாகியதில் அதில் பயணித்த 5 பேர் காயமடைந்து முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து இரவு மன்னார் நோக்கி குறித்த பேருந்து வந்து கொண்டிருந்த போது இன்று காலை 5 மணியளவில் மடு வீதி பரயனாலன் குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மதகு ஒன்றுடன் போதி அருகில் உள்ள வாய்க்கால் பகுதில் வீழ்ந்துள்ளது.

 இதன் போது குறித்த பேருந்தின் சாரதி உற்பட 5 பேர் காயமடைந்து முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் சாரதி உட்பட மூன்று பேர் கடுங் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 குறித்த பேருந்தின் சாரதியான மதவாச்சியைச் சேர்ந்த பியந்த காமினி(வயது-25) மற்றும் புத்தளத்தைச் சேர்ந்த எம்.ரி.எம்.ரவுப் (வயது-24),கே.ஜெயின்ஸ் (வயது-56) ஆகிய மூன்று பேருமே தற்போது முருங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாரதி நித்திரை தூக்கத்தில் இருந்தமையினாலேயே குறித்த விபத்து இடம் பெற்றதாக பேரூந்தில் இருந்த மக்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கொழும்பில் இருந்து மன்னார் வந்த தனியார் பேருந்து மடு வீதியில் விபத்து.5 பேர் காயம். Reviewed by Admin on September 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.