இலங்கை மெய்வள்ளுநர் சங்கத்தின் தேசிய தொழில்நுட்ப பயிற்சி பணிப்பாளராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கலாநிதி ஜெகனேந்திரன் செல்லத்துரை நியமனம்
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தேசிய தொழில்நுட்ப மற்றும் பயிற்சி பணிப்பாளராக
மன்னார் மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர்
கலாநிதி ஜெகனேந்திரன் செலத்துரை அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மெய்வல்லுனர் உலகிற்கே பெருமையூட்டும் சிறப்பான தருணமாகும்.
கல்வி, அறிவு, அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கும் அவர், ஒரு சிறந்த மெய்வல்லுனர் பயிற்சியாளராகவும், பயிற்சியாளர் கல்வியாளராகவும், விளையாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளராகவும் உலகளவில் மதிப்பைப் பெற்றவர்.
அவர் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியல் விரிவுரையாளராக பணியாற்றி பல மாணவர்களையும் பயிற்சியாளர்களையும் உருவாக்கியதுடன், தற்போது நியூசிலாந்தில் Phoenix Athletics நிறுவனத்தில் பயிற்சி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
மேலும் அவர்:
🎓 இங்கிலாந்தில் Sport & Exercise Science துறையில் இளங்கலை பட்டம்
🎓 நியூசிலாந்தின் Canterbury University யில் விளையாட்டு அறிவியலில் கலாநிதி (PhD) பட்டம்
அத்துடன்:
🏅 World Athletics Level 1 & Level 2 சர்வதேச பயிற்சியாளர் தகுதி
🏅 Athletics New Zealand அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்
பல ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி, அவர்களின் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த வழிகாட்டியதுடன், இலங்கை மற்றும் நியூசிலாந்து தடகள வளர்ச்சியில் மறக்க முடியாத பங்களிப்பை செய்துள்ளார்.
அவரது இந்த உயரிய நியமனம்:
✔️ தொழில்நுட்ப அதிகாரிகள் வளர்ச்சி
✔️ பயிற்சியாளர் கல்வி மேம்பாடு
✔️ உயர் செயல்திறன் விளையாட்டு வளர்ச்சி
போன்ற துறைகளில் புதிய முன்னேற்றங்களையும் உயர்ந்த தரத்தையும் உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
✨ இலங்கை மெய்வல்லுனர் துறையின் எதிர்காலத்தை மேலும் உயரங்களுக்கு கொண்டு செல்லும் இந்த மகத்தான பொறுப்பில் கலாநிதி ஜெகனேந்திரன் செலத்துரை அவர்கள் சிறந்து விளங்கி பெருமை சேர்க்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
🌟 “அறிவால் வழிநடத்தி – அனுபவத்தால் உயர்த்தி – அர்ப்பணிப்பால் விளையாட்டு உலகை முன்னேற்றும் தலைவர்”
Reviewed by Vijithan
on
March 18, 2026
Rating:


No comments:
Post a Comment