எமது வாக்குகளை பயன்படுத்தி எமது நிலத்தை,அடையாளத்தை, இருப்பை, பாதுகாக்க உதவுங்கள்-இ.குமரேஸ்.
எமது உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பிக்கும் போதே இந்த அபிவிருத்திதிட்டங்கள் வௌ;வேறு பெயர்களில் முன்னைய அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ரெட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளாரான ஆசிரியர் யூட்குரூஸ் என்பவரை ஆதரித்து நேற்று மன்னார் அச்சங்குளம் மாதர் அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ரெட்ணசிங்கம் குமரேஸ் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,,,
எமது வாக்குரிமையை திருடுகிறவர்கள் மீது மக்களாகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.அபிவிருத்தி என்ற மாயைகளால் தங்கள் சுயநலத்திற்காக செயற்படும் அரச ஊழியர்கள் மட்டில் கூடிய தெளிவு இருக்கவேண்டும்.
உங்களிடம் வருகிறவர்களிடம் வீடு தேடி வந்ததிற்கான காரணத்தை அறிந்து அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
குறிப்பாக மீளெழுச்சி என்ற போர்வையில் சமுர்த்தி என்ற போர்வையில் வருகின்றவர்களிடம் நீங்கள் அரச உத்தியோகஸ்தர்களா? அல்லது அரசியல் வாதிகளின் கைக்கூலிகளா என்பதை அவர்களுக்கு புரியும் பாசையில் கூறுங்கள் கேள்விகளையும் கேளுங்கள்.
நாம் எமது உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பிக்கும் போது இந்த அபிவிருத்திதிட்டங்கள் வேவ் வேறு பெயர்களில் முன்னைய அரசுகளால் முன்னெடுக்கப்பட்டன.
அப்போதெல்லாம் எமது மாவட்டத்தில் புகையிரதச் சேவை இடம் பெற்றது. பாதைகள் நன்றாக இருந்தன.
ஆறு திரையரங்குகளில் சினிமா படங்களும் பார்த்தோம்.
தலை மன்னாரிலிருந்து இந்தியாவிற்கும் கப்பல் சேவை நடைபெற்றது. விரும்பிய இடங்களில் எமது தொழிலை நாம் செய்து வந்தோம்.
அப்படியான சூழலில் தான் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்தோம். இன்னும் தீர்வு கிட்டவில்லை.
ஆனால் இந்த அரசு அபிவிருத்திக்கும்,சலுகைகளுக்கும் தான் நாம் போராடினோம் என்ற தோற்றப்பாட்டில் சலுகைகளை காட்டி எமது வாக்குகளை களவாடி எம்மினத்தை அடிமைப்படுத்தும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
பிரதேச,நகரசபைகளுக்கு உற்பட்ட இடங்களில் உலகவங்கி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நாம் செய்கின்ற வேலைகளை கூட தமக்கு கூலிக்கு அரசியல் செய்கின்ற அல்லது அவர்கள் கொடுக்கும் அரிசி,பருப்பு பொதிகளுக்கு அடிமையானவர்களை வைத்து போலியான பிரச்சாரம் செய்து எமது வாக்குகளை சூறையாடி எம்மினத்தை இன்னும் அறுபது ஆண்டுகள் அடிமைகளாக வைத்திருக்க எல்லா வழிகளிலும் ஆட்சியாளர்கள் கங்கணம் கட்டி செயற்படுகிறார்கள்.
ஆகவே தமிழினம் இப்படியான சூட்சுமங்களை புரிந்து கொண்டு சரியாக சிந்தித்து இத்தேர்தல் ஊடாக நிரந்தர தீர்வையும், இலக்கையும் அடைவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதுடன் தமிழினத்திற்கு வலுச்சேர்க்க மக்கள் ஒவ்வொருவரும் இன்றிலிருந்து உறுதியுடன் உழைக்கவேண்டும். எனதெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
(8-09-203)
எமது வாக்குகளை பயன்படுத்தி எமது நிலத்தை,அடையாளத்தை, இருப்பை, பாதுகாக்க உதவுங்கள்-இ.குமரேஸ்.
Reviewed by Admin
on
September 08, 2013
Rating:
No comments:
Post a Comment