மடு பிரதான வீதியில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம்,டிப்பர் மோதி ஒருவர் பலி.(படங்கள் )
-மடு-பரயநாளன் குளம் பிரதான வீதியில் உள்ள புகையிரத பாதையில் இன்று (8-9-2013) காலை 7.45 மணயளவில் இடம் பெற்ற விபத்தில் மன்னார் தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மடு பரயநாளன் குளம் பிரதான வீதியில் உள்ள புகையிரத பாதையை கடந்து பிரதான வீதிக்கு மண் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்ட டிப்பர் வண்டி மதவாச்சி பிரதான வீதியூடாக மடு புகையிரத நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியான மன்னார் தம்பனைக்குளத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வடிவேல் செல்வக்குமார் (வயது-33) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த புகையிரத பாதையில் உள்ள கடவையில் பாதுகாப்பு பெரியல்கள் அமைக்கப்பட்டிருந்த போதும் சம்பம் இடம் பெற்ற போது குறித்த இடத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸார்,மற்றும் புகையிரத பணியாளர்கள் எவரும் இல்லை என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மடுவிற்காண புகையிரதச் சேவைகள் இடம் பெற்று வருகின்ற போதும் காலை 9.30 மணிக்கு பிரகே மடு புகையிரத நிலையத்தை வந்தடைவது வழமை.ஆனால் சம்பவ தினமான இன்று காலை 7.45 மணியளவில் வழமைக்கு மாறாக புகையிரதம் மடு தரிப்பிடத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
08-09-203)

Reviewed by Admin
on
September 08, 2013
Rating:
No comments:
Post a Comment