அண்மைய செய்திகள்

recent
-

புரிந்துணர்வு உடன்படிக்கை மன்னாரில் கைச்சாத்திடப்படவுள்ளது

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வட மாகாணசபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது.

இரு தரப்பினருக்குமிடையில் நடைபெற்ற பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை மையமாக வைத்து எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இத் தேர்தல் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டு வட மாகாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், தொழில் மற்றும் வாழ்வாதாரம், கல்வி, கலைக் கலாச்சார அம்சங்கள் உட்பட அடிப்படை உரிமைகள் சார்ந்த பல்வேறு விடயங்களும் இரு தரப்பினருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கவனத்திற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 3ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூவமாக வெளியிடப்பட்ட வட மாகாணசபைத் தேர்தல் 2013ற்கான மேற்படி வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் பிரத்தியேகமான தலைப்பின் கீழ் முஸ்லிம்களின் நலன்கள் அபிலாஷைகள் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இவற்றுக்கும் மேலதிகமாக அமையப்போகும் வட மாகாணசபையில் முஸ்லிம்கள் தொடர்பிலான விடயங்கள் எவ்வாறு கவனத்திற் கொள்ளப்படவெண்டும் எனவும் விழுமிய அடிப்படையிலான நல்லாட்சிக் கூறுகள் பிரதிபலிக்கக் கூடியதாக எவ்வாறு மாகாணசபை நிருவாகம் அமைய வேண்டும் எனவும் தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துடனும் புரிந்துணர்வுடனும் கூடிய சக வாழ்வைக் கட்டி எழுப்புவது போன்ற விடயங்களையும் உள்ளடக்கியதாக இரு தரப்பினருக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைதிங்கட்கிழமை (09.09.2013) மன்னாரில் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது.
புரிந்துணர்வு உடன்படிக்கை மன்னாரில் கைச்சாத்திடப்படவுள்ளது Reviewed by Admin on September 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.