இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிசம்பர் 19ம் திகதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
அதன்படி, ஒக்டோபர் 11ம் திகதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்´ என்பது இந்தாண்டு தொனிப்பொருளாகும்.
உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.
பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். இருபது ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்று ஓரளவுக்கு மாணவிகளும் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இருப்பினும் இன்றும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.
அவர்கள் பள்ளி செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு வருமானம், பாதுகாப்பு, கலாசாரம், கல்வி நிறுவனம் ஆகியவை காரணமாக கூறப்படுகின்றன. பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்துகிறது.
இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
Reviewed by Admin
on
October 11, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment