அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவிலிருந்து 5 இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்!

நவுறு தீவுகளில் ஓர் ஆண்டு தங்க வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்களும் நாடுகடத்தப்படவுள்ளனர். இந்த ஐவருள் ஓர் சிங்கள (42) இனத்தவரும் உள்ளார். இவர் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நாடு கடத்தலை தடுப்பதற்கு அவசர வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. 

 கடந்த ஆவணி மாதம் முதல் இவர்கள் நவுறு குர்டின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நபர்கள் நவுறு தடுப்பு முகாமிலிருந்து வெளியேற்றப்பட்மையிற்கான காரணம் தெரியவில்லை. இவர்கள் தற்பொழுது அவுஸ்திரேலியாவல் உள்ளார்கள். நவுறுவில் இவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளும் தெரியவில்லை. இச்செயற்பாடானது நவுறு தடுப்பு முகாமில் நவுறு அரசாங்கம் இயங்கும் தடுப்பு மையம் அல்லது நவுறு முகாமில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும் தெளிவின்மை காரணமாக இதுவோர் முழுமையான ஊழல் என தென்படுகின்றதென இயான் ரின்டோல் தெரிவித்தார்.

 அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு துறை எதிர்காலத்தில் குடியேற்றவாசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவின்மை காணப்படுகின்றது. நவுறு அரசாங்கமும் அதன் அகதிகள் தொடர்பில் பொறுப்பின்மையாக செயற்படுகின்றது.
அவுஸ்திரேலியாவிலிருந்து 5 இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்! Reviewed by Admin on October 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.