வடக்கு முதல்வரின் முதல் நடவடிக்கை; மாகாண சபை அலுவலகங்கள் விரைவில் ஒரே கூரையின் கீழ்
வடக்கு மாகாண சபையின் அலுவலகங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையை முதலில் முன்னெடுக்கவுள்ளதாக, வடக்கு மாகாணசபை முதலமைச்சராகக் கடமையேற்றுக் கொண்டுள்ள விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர், சபையின் கடமைகளை நேற்றுப் பொறுப்பெடுத்துக் கொண்டார் விக்னேஸ்வரன்.இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் கடமைகளை பொறுப்பெடுப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதன் பின்னர் தன்னோடு பணியாற்றப் போகின்ற செயலாளர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் அலுவலகங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் பின்பு வடக்கு மாகாணசபை முதலமைச்சரின் அலுவலகமாக இயங்கவுள்ள கட்டடத்தை சென்று பார்வையிட்டதுடன், வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்துக்கும் பயணம் மேற்கொண்டார்.
வடக்கு முதல்வரின் முதல் நடவடிக்கை; மாகாண சபை அலுவலகங்கள் விரைவில் ஒரே கூரையின் கீழ்
Reviewed by Admin
on
October 10, 2013
Rating:
No comments:
Post a Comment