அண்மைய செய்திகள்

recent
-

போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவிடம் அமைக்கும் யோசனை வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைப்பு

போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என யாழ் சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு வடக்கு மாகாண சபையின் அனுமதியை பெறுவதற்காக அது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீஸ்கந்தராஜா ஸ்ரீரஞ்சன் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நான் இந்த யோசனையை கொண்டு வரவில்லை. சாவகச்சேரி பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமையவே இந்த யோசனையை கொண்டு வந்தேன். போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் உண்மையான தேவையும் அக்கறையும் சாவகச்சேரி மக்களுக்கு உள்ளது. 

 இதன் காரணமாக பிரதேச சபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் 15 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் மாத்திரமே அதனை எதிர்த்து வாக்களித்தார் என்றார். போரில் இறந்தவர்களை நினைவுகூர்தல் விடயத்தில் சர்ச்சை! மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள்புனரமைப்பு! கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்காமல் அவசர தீர்மானம்!சுரேஸ் பிறேமச்சந்திரன்
போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவிடம் அமைக்கும் யோசனை வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைப்பு Reviewed by Admin on October 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.