எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 8-30 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன் போது தந்தை செல்வாவின் தூபிக்கு மலர் மாலை அணிவித்த பின்னர் ஊர்வலமாக மாகாணசபை உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்ட பின்னர் மண்பத்தில் பதவி ஏற்பு இடம்பெறும் என்றும் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம்
Reviewed by Admin
on
October 09, 2013
Rating:

No comments:
Post a Comment