அண்மைய செய்திகள்

recent
-

60 ஆண்டுகளில் சந்திக்காத துயரங்களை இறுதி 4 ஆண்டுகளில் சந்தித்துள்ளோம்: மாவை

நாம் ஒரு சவாலான காலகட்டத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலைச் சந்தித்தோம். 60 ஆண்டுகளாக நாம் சந்தித்த துன்ப துயரங்களை விட இந்த 4 ஆண்டுகளில் கொடூரமான காலகட்டங்களை நாம் எதிர்கொண்டுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

 வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்ததன் பின்னர் அவ்வெற்றிக்குப் பங்காற்றிய மக்கள் சந்திப்பொன்று இன்று காலை 11 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. 

இதன்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார் 'பௌத்த பேரின வாத அரசுகளினால் எமது அடையாளங்கள் அழிந்து போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆளும் அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்குள்ளும் அரச அடிவருடிகளின் பிடிக்குள்ளும் இராணுவ பயங்கரங்களுக்குள்ளும் அமிழ்த்தப்பட்டிருந்த எமது மக்கள் இத்தேர்தலைத் துணிகரமாக எதிர்கொண்டு சரியான பதிலடியினை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வழங்கியுள்ளனர். 

 இதற்காக எம்மக்களுக்கு எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கும் இவ்வேளையில் தொடர்ந்தும் எமது ஜன நாயகப் போராட்டத்திற்கு தங்கள் முழு ஆதரவினையும் வேண்டி நிற்கின்றோம். இதன் மூலம் சிங்களப் பேரின வாத சக்திகளிடமிருந்து விடுதலை பெறுகிற இனமாக நாம் மாற வேண்டும் எனத் தெரிவித்தார்.
60 ஆண்டுகளில் சந்திக்காத துயரங்களை இறுதி 4 ஆண்டுகளில் சந்தித்துள்ளோம்: மாவை Reviewed by Admin on October 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.