வட மாகாண சபைக்காக ரூ.17 பில்லியன் ஒதுக்கீடு
2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமாக 11,500,000,000 ரூபாவும் மூலதன செலவினமாக 5,831,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டுக்கு பின்னர் வடமாகாண சபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்டது.
இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கு 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் மீண்டுவரும் செலவினமான 12 பில்லியன் ரூபாவும் மூலதன செலவாக 3 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சுக்கு 148 பில்லியன் ரூபா, 2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண சபைக்காக ரூ.17 பில்லியன் ஒதுக்கீடு
Reviewed by Admin
on
October 23, 2013
Rating:
Reviewed by Admin
on
October 23, 2013
Rating:


No comments:
Post a Comment