தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் தெரிவு தொடர்ந்தும் இழுபறி நிலை
வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் தெரிவு தொடர்ந்தும் இறுதி முடிவுகள் எவையும் எடுக்கப்படாமல் இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றது.
அமைச்சர்கள் தெரிவு மற்றும் பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றும் நாளையும் கூடித்தீர்மானிக்கவுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
வடக்குமாகாண முதலமைச்சர் தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார். அதுபோன்று தெரிவு செய்யப்படவுள்ள அமைச்சர்களும் நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே போனஸ் ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னமும் அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை.
கூட்டமைப்பில் உள்ள ஒவ்வோரு கட்சிக்கும் ஒரு அமைச்சர்கள் என்ற வகையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான பேச்சுக்கள் தற்போது பேசப்பட்டு வருகின்றது.
மிக விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் தெரிவு தொடர்ந்தும் இழுபறி நிலை
Reviewed by Admin
on
October 02, 2013
Rating:

No comments:
Post a Comment