
எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் வீடுகளில் அதற்கான வேலைகளை மேற்கொள்வதற்கும் கோயில்களுக்குச் செல்வதற்கும் வசதியாக தீபாவளிக்கு முன்தினமான முதலாம் திகதி வெள்ளிக்கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமது சமய அனுட்டானங்களில் ஒன்றாகிய தீபாவளித் திருநாளை இந்து சமய மக்கள் கொண்டாடுவது வழக்கமாகும் . திங்கள் முதல் வெள்ளி வரை வெளிமாவட்டங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள் குறித்த தினங்களில் வெளி மாவட்டங்களில் தங்கி நின்றே கடமையாற்றுகின்றனர். தமது பிள்ளைகளுடன் இணைந்து இத் திருநாட்களைச் சிறப்புடன் கொண்டாடவும் பிள்ளைகளுககு புத்தாடைகள் எடுப்பதற்கும் மற்றும் வீட்டு வேலைகளை முன்னெடுப்பதற்கும் ஏதுவாக தீபாவளிக்கு முன்தினத்தை விடுமுறையாக அறிவிக்குமாறு வட மாகாண கல்வி அமைச்சரிடம் வெளிமாவட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment