தாதியர்கள் நாளை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு
நாளை காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேரம் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என குறித்த தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சபையின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
சம்பளம், கொடுப்பனவு உள்ளிட்ட 6 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இப்பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
எனினும் சிறுவர் சீமாட்டி வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை, மஹமோதர வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, பாடசாலை வீதி மகளிர் வைத்தியசாலை, டி சொய்சா வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாதென அவர் கூறியுள்ளார்.
தாதியர்கள் நாளை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு
Reviewed by Author
on
October 31, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment