எங்களுக்கும் எங்கள் சாமிக்கும் வாழ ஒரு இடமில்லை: தம்புள்ளை மக்கள் கண்ணீர்
தம்புள்ளை பௌத்த சிங்கள புனித நகரமாக்குதல் திட்டம் காரணமாக ஐம்பது வருடங்களுக்கு மேலாக வசித்த தமிழ் குடும்பங்கள் எங்கு போவதென்று தெரியாத நிற்கதி நிலையில் உள்ளனர். குறித்த குடும்பங்கள் வெளியேற வேண்டும் என்று பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் எச்சரிக்கப்படுகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக அண்மையில் அந்த மக்கள் வணங்கி வந்த 50 வருடங்கள் பழமையான பத்திரகாளியம்மன் ஆலயம் தரைமட்டமாக அழிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களின் முன்னர் இனந்தெரியாத நபர்கள் என்ற போர்வையில் இந்த ஆலயத்தின் சிலை சேதமாக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வாலயத்தினை இரவோடு இரவாக தரைமட்டம் ஆக்கியதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆலயம் உடைக்கப்பட்டிருந்தததைப் பார்த்த மக்கள் தலைகளில் கைகளை வைத்து ஓ… என அழுததினால் அப்பகுதியே அதிர்ந்தது.
நகர சபை இவ்வாலயத்தையும் இப்பகுதி மக்களையும் வெளியேறுமாறு அறிவித்த நிலையில் மக்கள் மாற்றிடங்களுக்கு செல்ல முதலில் சம்மதிக்காதபோதும் பின்னர் சம்மதித்தனர். ஆனாலும் மாற்றிடங்கள் மறுக்கப்பட்ட நிலையில் திருட்டுத்தனமாக இந்த மக்கள் வணங்கி வந்தத பழமை மிக்க ஆலயம் அழிக்கப்பட்டிருக்கிறது.
எங்களுக்கும் எங்கள் சாமிக்கும் வசிக்க ஒரு இடமில்லை என்று இந்த மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர். ஆலயம் அழிக்கப்பட்டதன் காரணமாக இப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழர்கள் என்பதினால் வடக்கில் மாத்திரமல் நாங்கள் தெற்கிலும் வாழ முடியாத நிலமையே காணப்படுகிறது என்று இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். சிங்கள பௌத்த புனித நராக்கல் திட்டத்தினால் தாம் பெரும் ஆபத்தின் மத்தியில் வாழ்வை உணர்வாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவரும் எங்கும் சென்று குடியேறலாம் என்று அரசாங்கம் பேசிக்கொண்டே எமது இருப்பிடத்தை அழித்து இங்கிருந்து துரத்தி இதை சிங்கள பௌத்த புனித நகரம் ஆக்குவது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.
தற்பொழுது அழிக்கப்பட்ட பத்திரகாளியம்மன் ஆலயத்தின் சிலை அப்பகுதியில் உள்ள மக்களின் வீடு ஒன்றிலேயே வைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டிற்குச் சென்று தமது சாமியை வழங்கி வருகிறோம் என்று தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் தமக்கும் தமது சாமிக்கும் வசிக்க இடம் ஒன்று வேண்டும் என்கின்றனர்.
கடந்த ஒரு சில தினங்களின் முன்பாகவே அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் ஜே.பி.வியின் செயலாளர் ரில்வின் சில்வாவும் அரசாங்கம் பலவந்தமாக குடியேற்ற முடியாதே தவிர நாட்டில் எங்கும் எவரும் சென்று குடியேறலாம் – அது அவர்களின் உரிமை என்று தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதத்தக்கது.
GTN

Reviewed by NEWMANNAR
on
October 31, 2013
Rating:

No comments:
Post a Comment