அண்மைய செய்திகள்

recent
-

அப்பாவியான சகோதரி றிசான நபீக்கிக்கு சிரைச்சேதம் -மகளை கற்பழித்து கொலை செய்த சவுதி மதகுருவுக்கு 8 ஆண்டுகள் சிறை -இதுதான் சவுதி அரேபியாவின் தர்மம்

மகளை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மதகுருவுக்கு சவுதியில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 600 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2012 ஆம் ஒக்டோபர் மாதம் லாமா அல் - காம்டி என்ற குறித்த சிறுமி தந்தையின் கொடூர தாக்குதலுக்குள்ளாகியிருந்தார்.

அவரது மண்டையோடு நொறுங்கியிருந்துடன், மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.




அச்சிறுமி பல முறை வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தாகவும் தகவல் வெளியாகியிருந்த போதிலும் அதனை அவரது தாயார் அச் சந்தர்ப்பத்தில் மறுத்திருந்தார்.

இச்சம்வம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சிறுமியின் கொலைக்கு காரணமான அவரது தந்தை சில மாதங்கள் மட்டும்  சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சிறுமியின் தாய்க்கு அதாவது தனது மனைவிக்கு குருதிப் பணம் செலுத்த இணங்கியமையால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



எனினும் இதன் பின்னர் அல் - காம்டியை தண்டிக்க வேண்டுமெனவும் லாமாவின் கொலைக்கு நீதி வேண்டுமெனக் கோரியும் சவுதிக்கு அழுத்தம் அதிகரித்தது.

இந்நிலையில் மறுபடியும் விசாரணைக்கு வந்த இவ் வழக்கில் சிறுமியின் மரணத்திற்கு காரணமான தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 600 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அப்பாவியான சகோதரி றிசான நபீக்கிக்கு  சிரைச்சேதம் -மகளை கற்பழித்து கொலை செய்த  சவுதி மதகுருவுக்கு 8 ஆண்டுகள் சிறை -இதுதான் சவுதி அரேபியாவின் தர்மம் 
அப்பாவியான சகோதரி றிசான நபீக்கிக்கு சிரைச்சேதம் -மகளை கற்பழித்து கொலை செய்த சவுதி மதகுருவுக்கு 8 ஆண்டுகள் சிறை -இதுதான் சவுதி அரேபியாவின் தர்மம் Reviewed by NEWMANNAR on October 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.