அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாணத்தில் பாரபட்சம்! தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்திற்கான நிதி ஒதுக்கீடுகளிலும் சிற்றூழியர் நியமனங்களிலும் இன ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பாராபட்சம் காட்டப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.

குறித்த விடயங்களில் தமிழர்களும் தமிழ் பிரதேசங்களும் புறக்கணிக்கப்படுவதாக கவலை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, முறைகேடான முறையில் ஆளும் தரப்பு நடந்து கொள்வதாகவும் கூறுகின்றது.

குறிப்பாக நடப்பாண்டில் ”1000 பாடசாலைகள்” திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 40 மில்லியன் ரூபாய் நிதியில், 30மில்லியன் ரூபாய் நிதி கல்வி அமைச்சர் விமலவீர திஸநாயக்கா பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்ட சிங்கள பாடசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் கூறுகின்றார்.

சுகாதார அமைச்சு மற்றும் முதலமைச்சரின் கீழ்வரும் உள்ளுராட்சி அமைச்சு உட்பட ஏனைய அமைச்சுகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சமச்சீரான பிராந்திய அபிவிருத்தி திட்டத்திற்கான கிராமங்கள் தெரிவிலும் தமிழ் கிராமங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது.

மாகாண சபை உறுப்பினர், இரா. துரைரெத்தினம் இது தொடர்பாக குறிப்பிடுகையில், 72 வீத தமிழர்களையும் 28 சதவீத முஸ்லிம்களையும் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு தமிழ் கிராமங்களும் இரண்டு முஸ்லிம் கிராமங்களும் இந்தத் திட்டத்துக்கு தெரிவாகியுள்ள அதே நேரத்தில், அம்பாறை மாவட்டத்தில் 18 சதவீதம் தமிழர்கள் வசிக்கின்ற போதிலும் ஒரு தமிழ் கிராமம் கூட உள் வாங்கப்படவில்லை என்றும் ஆனால் இம் மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் கிராமங்களும் ஒரு சிங்கள கிராமமும் தெரிவாகியுள்ளன என்றும் கூறுகிறார்.

இதேவேளை, அமைச்சுகளினால் வழங்கப்பட்ட சிற்றூழியர் நியமனத்திலும் இதேநிலைதான் காணப்படுவதாக கூறும் அவர், அண்மையில் விவசாய அமைச்சினால் வழங்கப்பட்ட நியமனத்தில் 9 முஸ்லிம்களும் இரு தமிழர்களும் ஒரு சிங்களவரும் நிரந்தர நியமனத்திற்குள் உள் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் எவரும் இல்லாத மாகாண அமைச்சர்கள் வாரியத்திலுள்ள நான்கு முஸ்லிம் அமைச்சர்களும் ஒரு சிங்கள அமைச்சரும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் அவர்களது பிரதேசம் அவர்களது இனத்தை மையப்படுத்தி ஒதுக்கீடுகளை செய்யும் போது மத்திய அரசு போன்று கிழக்கு மாகாண சபையும் தமிழர்களையும் தமிழ் பிரதேசங்களையும் புறக்கணிப்பதாக அவர் மேலும் கூறினார்.

கிழக்கு மாகாண சபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள மாகாண விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், எந்த பிரதேசத்திற்கு அபிவிருத்தி தேவையோ, அவை அடையாளம் காணப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறுகின்றார்.

தனது அமைச்சுக்குரிய ஆளனியில் 60 சத வீதம் தமிழர்களும் 21 சத வீதம் முஸ்லிம்களும் 19 சத வீதம் சிங்களவர்களும் பணியாற்றும்போது, இன ரீதியான பாகுபாடு என எவ்வாறு குற்றம் சாட்டமுடியும்? என அவர் வினா எழுப்பினார். ஏனைய அமைச்சுக்களிலும் இதே நிலைதான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் பாரபட்சம்! தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டு Reviewed by Admin on November 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.