அண்மைய செய்திகள்

recent
-

இடித்த ஆலயத்தை மீண்டும் கட்டுங்கள்; இந்து மகா சபை கோரிக்கை

நாட்டில் உள்ள இந்துக்கோயில்களை இடித்து அழிக்கும் நடவடிக்கைகள் நாட்டின் இன நல்லிணக்கத்திற்னை ஒரு போதும் ஏற்படுத்தாது என இந்து மகா சபை தெரிவித்துள்ளது. தம்புள்ளை காளிகோயில் இரவோடு இரவாக தகர்த்து அழிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து இந்து மகா சபை வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்துக் கோயில்கள் இடித்தளிக்கப்பட்டு வருவது காட்டுமிராண்டித்தனமான ஒரு செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒருபோதும் நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. அந்நியராட்சிக் காலமான போர்த்துக்கீசர் காலத்தில் நாட்டிலிருந்த பல ஆலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

 அதே போன்ற நிலமையையே தம்புள்ள சம்பவம் நினைவுபடுத்துகின்றது. எனவே இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். சுதேச மதமாகிய இந்து மத ஆலயத்தை அழித்துவிட்டு அந்த இடத்தில் புனித மையம் என்ற போர்வையில் மாற்று மதச் சின்னமொன்றை அமைக்க முற்பட்டுள்ள செயலானது மிகவும் அநாகரிகமான ஒரு செயற்பாடாகும். மனித நாகரிகம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், பல்லின மக்கள் வாழுகின்ற எமது நாட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 மனிதத்தை நேசிக்கின்ற, மதத்தை நேசிக்கின்ற எவருமே இந்த அநாகரிக செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தச் செயற்பாடானது நாட்டிலுள்ள அனைத்து இந்து மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகும். இதனால் அனைத்து இந்து மக்களின் மனங்களும் வேதனைப்படுத்தப்பட்டுள்ளன. தம்புள்ள காளிகோயில் தொடர்பான விடயம் கடந்த சில மாதங்களாக இழுபறி நிலையில் இருந்த போதிலும் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

இது இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இந்து மக்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. எனவே, தம்புள்ள காளிகோயில் இடிக்கப்பட்ட விடயம் தொடர்பாக அரசும் பௌத்த சாசன அமைச்சு உடனடியாகத் தலையிட்டு தம்புள்ள காளிகோயில் சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு அந்த ஆலயத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அத்துடன் அந்த இடத்தில் வசித்த இந்து மக்களை மீண்டும் அதே இடத்தில் குடியிருப்பதற்கான நிலமையையும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமே நாட்டிலுள்ள பல இலட்சக்கணக்கான இந்து மக்களின் மனங்களில் நல்லெண்ணத்தை வளர்க்க முடியும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடித்த ஆலயத்தை மீண்டும் கட்டுங்கள்; இந்து மகா சபை கோரிக்கை Reviewed by Admin on November 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.