மன்னார் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் கட்டண அதிகரிப்பை அமுல் படுத்தவில்லை-ரி.ரமேஸ்.
-இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
தனியார் போக்குவரத்துச் சேவையினர் 01-11-2013 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 7 வீதத்தினால் தமது கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் நாங்கள் இது வரை அமுல் படுத்தவில்லை.எமது மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக காணப்படுகின்றது.மீள் குடியேற்றம் செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் உள்ளனர்.
எமது சேவைகள் அதிகளவில் மீள்க்குடியேற்ற கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில் இதனை பரிசீலினை செய்து கட்டண அதிகரிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்.
இது தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் அவர்களிடம் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்லோம்.அவரின் பதில் கிடைத்தவுடன் எமது கட்டண உயர்வை அமுல் படுத்த திட்டமிட்டுள்ளோம்.
எமது பேருந்து உரிமையாளர்கள் பெரிதும் கஸ்டத்தின் மத்தியில் எவ்வித இலாப நோக்கின்றி சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் இறுதி முடிவை எமக்கு வெகு விரைவில் வழங்க வேண்டும்.அதனை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.என மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஸ் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் அவர்களை பல முறை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லலை.
மன்னார் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் கட்டண அதிகரிப்பை அமுல் படுத்தவில்லை-ரி.ரமேஸ்.
Reviewed by Admin
on
November 02, 2013
Rating:
No comments:
Post a Comment