அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை கண்காணிக்க வேண்டும் பொலிஸாரிடம் மக்கள் கோரிக்கை
அதிகளவான பயணிகளை ஏற்றி நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற தனியார் பஸ்களை போக்குவரத்து
பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
போக்குவரத்து விதிமுறைகளைக் கட்டுப்படுத்தி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் அலகினால் புத்தூரில் நடத்தப்பட்டது .
வலி . கிழக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பாடசாலை அதிபர்கள் , மாணவர் பிரதிநிதிகள் , பொதுநிறுவனங்களின் நிர்வாகிகள் தனியார் மினிபஸ் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர் .
இக் கலந்துரையாடலில் , அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி பயணிகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துகின்ற தனியார் பஸ்களை கண்காணிக்க வேண்டும் .
இந்த விடயத்தில் பொலிஸார் தகுந்த ஏற்பாடுகளை செய்து பயணிகளுக்கு வசதி செய்யவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வலி - யுறுத் - தப்பட்டது .
பொது மக்களின் கோரிக்கை நியாய - மானது என்பதை ஏற்றுக்கொண்ட காங் - கேசன்துறைப் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் , தனியார் மினிபஸ் இரு தரப்பின் நியாயங்களைக் கேட்டறிந்தார் .
தரப்பினரின் கருத்துக்களையும் ஆராய்ந்த பின்னர் பொதுமக்களுக்கு வசதிசெய்வதாகவும் தனியார் மினிபஸ்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவது தொடர்பாக விரிவாக ஆராய்ந்த பின்னர் பொதுவான விதிமுறைகள் தொடர்பாக அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார் .
வாகனப் போக்குவரத்து நடைமுறை மற்றும் வீதி விபத்துக்கள் தொடர்பான திரைப்படமும் காண்பிக்கப்பட்டது . பாடசாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்கமைக்கும் மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன .
அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை கண்காணிக்க வேண்டும் பொலிஸாரிடம் மக்கள் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
November 21, 2013
Rating:

No comments:
Post a Comment