மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்.
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று(4-11-2013) காலை மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும் சட்டத்தரணியுமான பா.டெனிஸ்வரன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட மீனவர்கள் அனுபவித்து வருகின்ற துன்ப துயரங்கள் தொடர்பாக சமாசத்தின் செயலாளர் எஸ்.நிக்சன் அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.
இந்திய படகுகளின் அத்துமீறிய வருகையால் சிறுதொழில் மீனவர்களின் நாளாந்த தொழிலில் மிகுந்த பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அத்தோடு மீன்பிடி உபகரணங்களின் விலை ஏற்றமும் மக்களை வெகுவாக பாதித்துள்ளது என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில்,,,,,,
மீனவ சமூகங்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அதனூடாகவே தன்னாலான அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர் காலத்தில் மேற்கொள்ளமுடியும்.
இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தான் ஆராய்ந்து ஒரு ராஜதந்திர முடிவினை பெற்றுத்தருவதில் முனைப்பாக செயற்படுவேன் .
இலங்கையிலும் தடை செயப்பட்ட தொழில்களை நமது மீனவர்களும் நிறுத்தவேண்டும் என்றும் கடல் வளங்கள் வெகுவாக அழிந்துகொண்டு செல்லும் அபாயம் இருப்பதனால் எதிர்காலத்தில் வேறு நாடுகளில் இருந்து உணவுக்கான மீனை நாம் கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் .
எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் எதை விட்டு செல்லப்போகின்றோம் என சற்று சிந்தியுங்கள்.
எதிர்காலத்தில் மீனவர்களின் அபிவிருத்தி தொடர்பில் தான் அக்கறையுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்.
Reviewed by NEWMANNAR
on
November 05, 2013
Rating:
No comments:
Post a Comment