மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் 35 தமிழ் பொலிஸார் சேவையில்.
மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் 35 தமிழ் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக தமிழில் முறைப்பாடுகளை எவ்வித தடையுமின்றி மேற்கொள்ள முடியும் எனவும் மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மக்களின் நலன கருதி தற்போது இரவு நேரங்களிலும் தமிழ் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் .
மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் அதிகளவு தமிழ் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே மக்கள் எந்த பிரச்சினைகளுமின்றி தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என மன்னார் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த மேலும் தெரிவித்தார்.
மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் 35 தமிழ் பொலிஸார் சேவையில்.
Reviewed by NEWMANNAR
on
November 05, 2013
Rating:
No comments:
Post a Comment