இலங்கையின் போஷாக்கு சுட்டிகள் இரு தசாப்தங்களாக தேக்கம்
இலங்கையின் ஆரோக்கிய சுட்டிகள் உலகின் உயர் மட்டங்களிடையே காணப்படினும் போஷாக்கு சுட்டிகள் இரண்டு தசாப்தங்களாக தேங்கியிருப்பதாக ஓர் அறிக்கை கூறியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'போஷக்குக்கான பல்-துறை வேலைத்திட்டம்' என்பதை இன்று அமைச்சரவையில் சமர்ப்பித்தார்
'இலக்கு 2016, ஸ்ரீலங்கா ஒரு போஷாக்கிற்கான தேசம்' எனும் திட்டத்தினூடாக அரசாங்கம் இந்த பிரச்சினையை தீர்க்க எண்ணியுள்ளது.
சிறுவர்களிடையே வளர்ச்சியின்மை, நிறைக்குறைவு என்பவற்றை குறைப்பதில் 1970௨000 ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டிருந்தாலும் அதன் பின்னர் இந்த சுட்டிகளில் முன்னேற்றம் காணப்படவில்லை என இந்த அறிக்கை கூறியுள்ளது.
வளர்ச்சியின்மை வீதம் 17.3 சதவீதமாகவும் நிறைகுறைவு 21.1 சதவீதமாகவும் தொடர்ந்து காணப்படுகின்றதேயன்றி முன்னேற்றம் காணவில்லை. 20 வருடங்களாக உடல்மெலிவு 14.7 சதவீதமாக வருகின்றது. குறைந்த பிறப்பு நிறை 17.9 சதவீதமென தரவுகள் காட்டுகின்றன. நுவரெலியவில் வளர்ச்சியின்மை வீதம் 27 சதவீதமாக உயரத்தில் உள்ளது.
ஒரு பிள்ளையின் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் குறிப்பாக முதல் 1,000 நாட்களில் போதிய சத்துணவை உட்கொள்வது முறையான உடல், உள விருத்திக்கு முக்கியமானது.
குறைந்த நிறையுடன் பிறக்கும் பிள்ளை பிற்காலத்தில் நீரிழிவு, உயரழுத்தம் போன்ற நோய்களினால் பீடிக்கப்படலாம் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
இலங்கையில் ஆண்டு தோறும் ஐந்து வயதிலும் குறைந்த 4,285 சிறுவர்கள் மரணிக்கின்றனர். இதில் 1,500 பேர் வரையில் மந்த போஷாக்கின்மை காரணமாக மரணிக்கின்றனர் என்று அவ்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் போஷாக்கு சுட்டிகள் இரு தசாப்தங்களாக தேக்கம்
Reviewed by Admin
on
November 02, 2013
Rating:

No comments:
Post a Comment