சவூதி அரேபியாவில் இலங்கையர் இருவர் கைது:தொடரும் வலைவீச்சு
சவூதி அரேபியாவின் பொது மன்னிப்புக் காலம் கடந்த 3 ம்திகதியுடன் நிறைவடைந்த நிலையில்
தற்போது அங்கு சட்ட விரோதமாக தங்கியிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள ஏனையோரையும் கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சவூதி அரேபியாவில் வீசா முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை இம் மாதம் 3 ம் திகதியுடன் நாட்டைவிட்டு வெளியேறுமாறும் இவர்களிற்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது .

தற்போது கைது செய்யப்படாத 1200 இலங்கையர்கள் சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் தங்கியுள்ளதாக ஜெத்தா நகரில் உள்ள இலங்கை அலுவலகத்தின் தொழில் பிரிவின் செயலாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார் .
இவர்களில் 50 பேர் இலங்கை அலுவலகத்தின் முகாமில் தங்கியுள்ளதாகவும் அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை , சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இது தொடர்பில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
சவூதி அரேபியாவில் இலங்கையர் இருவர் கைது:தொடரும் வலைவீச்சு
Reviewed by Author
on
November 06, 2013
Rating:

No comments:
Post a Comment