அண்மைய செய்திகள்

recent
-

மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கொழும்பு செல்ல வேண்டும்.இந்திய வெளிவிவகார அமைச்சு பரிந்துரை. த ஹிந்து.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கொழும்பு செல்ல
வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு பரிந்துரைத்துள்ளதாக ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது .

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக , இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

இந்தியாவின் தேசிய நலன்களுக்கான இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் . பொதுநலவாய மாநாட்டில் , இந்தியப் பிரதமர் மன்மாகன்சிங் பங்கேற்பதற்கு , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும் , இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் , மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் .

அதேவேளை , இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு செல்வதற்கு பா.. எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை .

 இது மன்மோகன்சிங் கொழும்பு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் தரப்பினருக்கு சாதகமாக அமைந்துள்ளது . இதுகுறித்து கருத்து வெளியிட்ட பா.. உயர்மட்டத் தலைவர் ஒருவர் , பொதுநலவாய மாநாட்டில் , இந்தியா சார்பில் பிரதமரோ அல்லது உயர்மட்டக்குழுவோ பங்கேற்பதை தாம் ஒரு விவகாரமாக கருதவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் .

ஆனால் தமிழர்களுக்கு சமமான உரிமைகளும் , நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கரிசனை என அவர் குறிப்பிட்டுள்ளார் .


மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கொழும்பு செல்ல வேண்டும்.இந்திய வெளிவிவகார அமைச்சு பரிந்துரை. த ஹிந்து. Reviewed by Author on November 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.