மன்னாரில் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு -படங்கள்
நடைபெற்று முடிவடைந்துள்ள தரம் 5ந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை மன்னார் புனித.சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வினை மாணவர்களின் பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர்
குறித்த நிகழ்வின் போது தரம் 5ற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதேவேளை குறித்த மாணவர்களை நெறிபடுத்திய ஆசிரியர்களும் பெற்றோரால் கௌரவிக்கப்பட்டனர்
கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் புனித.சவேரியார் ஆண்கள் தேசிய கல்லுரி மாணவர்கள் 20 பேர் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். இதனை ஒட்டி குறித்த 20 மாணவர்களையும் இன்று கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இன்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் அகஸ்ரின், பிரதி அதிபர் அருட்சகோதரர்.செல்வதாஸ்,அருட்சகோதரி .ஜசிந்தா , ஆசிரியர்களான ஜி.ரவி ,பி.லெக்ஸ்,எஸ்.மெற்றில்டா, நுஸ்கானா ,பகுதி தலைவர்களான திரு.வி.பி.பெரேரா, செல்வி.லலிதா ஜோசப் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மன்னாரில் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு -படங்கள்
Reviewed by Author
on
November 06, 2013
Rating:
No comments:
Post a Comment