உலக மீனவர் தினத்தன்று மன்னார் மீனவர்கள் பணிபகிஸ்கரிப்பு : பிரச்சினைகள் தொடர்பான மகஜர் மன்னார் மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிப்பு -படங்கள்
இன்று காலை 9:30 மணியளவில் மன்னார் மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாச அலுவலகத்தில் கூடிய மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து பின் பல கோரிக்கைகள் மீனவ சங்கங்களினால் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாச அலுவலகத்தில் இருந்து மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக ஊர்வலமாக சென்று மன்னார் நகரத்தை அடைந்து அதன்பின் மன்னார் மாவட்ட செயலகத்தை சென்றடைந்தனர்.
மாவட்ட செயலகத்தில் மீனவர்களின் கோரிக்கைகளான
1) இந்திய இழுவைப்படகுகளின் தொழில் ஆக்கிரமிப்பு
2) இந்திய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் விரைந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தல்
3) தென்பகுதி மீனவர்களின் வருகையால் ஏற்படும் பாதிப்புகள்
4) தடைசெய்யப்பட்ட சிலீண்டர் தொழிலினால் ஏற்படும் பாதிப்புகள்
5) அனர்த்தத்தின் போது பாதிக்கப்படும் மீனவர்களுக்கான இழப்பிடுவழங்கப்படாமை
6) எரி பொருள் மானிய முத்திரை நிறுத்தத்தின் தாக்கம் என்னபவற்றை முன்நிறுத்தி மகஜர் கையளிக்கப்பட்டது
குறித்த மகஜரை மாவட்ட மீனவ கூட்டுறவு சமாசங்களின் தலைவர் ஆலம் அவர்கள் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. ஸ்டான்லி டி மெல் மற்றும் கடற்றொழில் பிரதிபணிப்பாளர் திரு.மிராண்டா அவர்களிடம் கையழித்தார்
மகஜரை பெற்றுக்கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இது தொடர்பான மகஜர் பின்வருமாறு
கௌரவ. கடற்றொழில் நீரியல் வளத்துறைஅமைச்சர்,
டாக்டர். ராஜிதசேனாரத்னஊடாக.
அரசாங்கஅதிபர்,
கச்சேரி,
மன்னார்.
மன்னார் மாவட்டமீனவர்கள் 21.11.2013 ந் திகதிஉலகமீனவர் தினத்தில் கீழ்காணும்
விடயங்களைமுன்வைத்துதொழில் பகிஸ்கரிப்பு
மன்னார் மாவட்டமீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,பாதிப்புக்கள்,துயரங்கள் இதுவரைஎவராலும் கண்டுகொள்ளப்படாமை இதுவரை இப்பிரச்சினைகள் தீர்வுகாணப்படாமை இதனால் தங்கள் இயலாமையின் வெளிப்பாட்டையும் ஆதங்கத்தையும் இன்றையஉலகமீனவர் தினத்தைபகிஸ்கரிப்பதன் மூலம் உலகறியச் செய்யதீர்மானித்துள்ளனர் மன்னார் மாவட்டத்தில் நாற்பதாயிரம் உறவுகளைகொண்டஒன்பதாயிரம் குடும்பங்கள் இக்கடலினூடாகமீன்பிடியின் மூலமானவாழ்வாதாரத்தைநம்பியவர்களாகஉள்ளனர் தன் உயிரைபணயம் வைத்துஉலகுக்குஉணவளிக்கும் அம் மீனவர்களின் நியாயமானகோரிக்கைகள் தீர்வுகானமுடியாததுமல்ல இம் மீனவர்களுக்காகஅனைவரும் சேர்ந்துதீர்வுகாண்பதுடன் அவர்களின் துயர் துடைக்கவழிசமைப்போம்.
1. இந்திய இழுவைப்படகுகளின் தொழில் ஆக்ரமிப்பு
2. இந்தியஅரசால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைமீனவர்களைவிரைந்து
விடுதலைசெய்தல்.
3. தென்பகுதிமீனவர்களின் மிதமிஞ்சியவருகை
4. தடைசெய்யப்பட் சிலிண்டர் தொழிலினால் தொழில் இழப்பு
5. அனர்த்தத்தின் போதுபாதிக்கப்படும் மீனவர்களுக்கான இழப்பீடுவழங்கப்படமை
6. எரிபொருள் மானியமுத்திரைநிறுத்தத்தின் தாக்கம் என்பவற்றைமுன்நிறுத்தி இப்பகிஸ்கரிப்பைமேற்கொள்ளுகின்றனர்.
இந்திய இழுவைப் படகுகளின் தொழில் ஆக்கிரமிப்பு
1. இந்திய இழுவைப் படகுகள் எமது கடல் பகுதிக்குள் உள்நுழைந்துதொழில் செய்கின்றமையால் எமதுவளங்கள் அழிக்கப்படுகின்றன.
2. போரின் வடுக்களிலிருந்துமீண்டமக்கள் கடலில் சுதந்திரமாகதொழில் செய்யமுடியாமை.
3. மீன் இனங்கள் வாழ்வதற்கு இயற்கையால் வழங்கப்பட்டமுருகைகற்களும் பவளபாறைகளும் அழிக்கப்படுகின்றன.
4. எதிர் காலசந்ததியினருக்குவளங்கள் இல்லாதுஅழிக்கப்படுகின்றன.
5. சிறுமீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைமுற்றாக இழந்துள்ளனர்.
6. பல இலட்சம் ரூபாபெறுமதியானவலைகள் மீன்பிடிஉபகரணங்கள் இந்திய இழுவைப்படகுகளால் இழுத்துசெல்லப்படுகின்றன,நாசமாக்கப்படுகின்றன இதற்கானகொடுப்பனவுகளோ,நிவாரணங்களோ,மானியங்களோவழங்கப்படுவதில்லை.
7. கடல் தாவரம் அழிக்கப்படுவதால் மீன்களுக்கும் குஞ்சுகளுக்கும் தேவையானஉணவும் அதற்கானபாதுகாப்பும் இல்லாமல் செய்யப்படுகின்றன.
8. எமதுகடற்பரப்பில் நாளொன்றுக்குபலகோடிரூபாபெறுமதியானகடலுணவுகள் சுரண்டப்படுகின்றன.
9. எமதுமீனவர்கள் வாரத்தில் மூன்றுதினங்களேஎமதுகடற்பரப்பில் தொழில் செய்யமுடியும் என்றநிலைஏற்பட்டுள்ளது.
இந்தியஅரசால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைமீனவர்களைவிரைந்து
விடுதலைசெய்தல்.
கடந்த இரண்டுமாதங்களுக்குமுன் எமதுகடற்பரப்பில் வைத்துஎல்லைகடந்துவந்தனர்
என்றகுற்றச்சாட்டைமுன்வைத்து இந்தியஅரசால் கைதுசெய்யப்பட்டுள்ளஎமதுசகோதரமீனவர்களைவிரைந்துவிடுதலைசெய்யஅரசுமுன்வரவேண்டும்.
தென்பகுதிமீனவர்களின் மிதமிஞ்சியவருகை
01. தென்பகுதிமீனவர்களின் மிதமிஞ்சியவருகையாலும் இங்குள்ளமீனவர்களின் இறங்குதுறைகளில் அதிகளவுவாடிகளைஅமைக்கின்றமையால் எமதுமீனவர்கள் பலஇடர்பாடுகளைஎதிர்நோக்குகின்றன.
02. இங்குள்ளசங்கங்களின் சட்டதிட்டங்களுக்குகட்டுப்படுவதில்லை.
03. சங்கங்களிடம் அனுமதிபெறுவதில்லை.
04. தங்களுக்குள் சங்கம் அமைத்துதன்னிச்சையாகசெயற்படுகின்றார்கள்.
05. அமைக்கும் வாடிகளைதொழில்காலம் முடிந்தவுடன் அகற்றாமல் செல்கின்றமை.
06. இவர்கள் வகைதொகை இன்றிவருவதாலும் பருவகாலங்களில் இக்கடல் பிரதேசத்தைபயன்படுத்துவதாலும், இக்குறுகியகடற்பிரதேசத்தைநம்பிவாழும் இக் கரையோரமக்கள் இப்பருவகாலமீன்பிடியை இழக்கின்றன.
07. மூன்றுதசாப்தங்களாகயுத்தத்தில் இருந்துமீண்டஎமதுமக்கள் இன்னும் பொருளாதாரமுன்னேற்றங்கள் அற்றநிலையிலேதொழில்களைமேற்கொண்டுவருகின்றநிலையில் தென்பகுதிமீனவர்களின் வருகையில் எமதுவாழ்வாதாரம் நலிவடைகின்றது.
08. ஆறுமாதகாலதொழிலின்றிகடன்பட்டுநகைகளைஅடகுவைத்துபிள்ளைகளின் கல்விச் செலவு,மருத்துவச் செலவு,போன்றசெலவுகளை கூட இந்தபருவகாலமூலம் தான் தொழில் செய்துமீட்டுக் கொள்ளுகின்றனர்.
09. ஒவ்வொருவருடமும் இவர்களதுவருகைமட்டுப்படுத்தப்பட்டஅளவில் இருந்துஅதிகரித்துக் கொண்டேபோவதனால் எம்முடையமீனவர்களின் அன்றாடமீன்பிடியில் பாரியவீழ்ச்சிஅடைகின்றநிலையும் பட்டினிவாழ்வும் காணப்படுகின்றது.
தடைசெய்யப்பட்டசிலின்டர் தொழிலைநிறுத்துதல்
01. எமதுகடல்பகுதியில் அட்டைசங்கினைபாஸ் என்றஅனுமதியின் பெயரில் சிலின்டர் பயன்படுத்தி இத் தொழில் புரிவோர் பயனடைகின்றார்கள்.
02. மன்னார் மாவட்டத்திலுள்ளஆயிரக்கணக்கானமீனவகுடும்பங்களுக்குவருமானத்தைதரக்கூடியஅட்டைச்சங்குதொழிலானதுசிலின்டர் பாவித்துகரையோரப்பகுதியில் தொழில் புரிவதால் பாரியதொழில் இழப்பைஎமதுமீனவர்கள் எதிர்நோக்குகின்றார்கள்.
03. 19.03.2013 கடற்றொழில் உதவிப்பணிப்பாளரின் கடிதம் மூலம் கரையோரம் தடைசெய்யப்பட்டுசிறிதுகாலம் ஓய்ந்திருந்தசிலின்டர் தொழில் மீண்டும் செய்யப்படுகின்றதுஆழ்கடலில் தொழில் செய்யஅனுமதிக்கப்பட்டசிலின்டர் கொண்டு கடல் அட்டை,சங்குகுளித்தல் தொழிலைஎமதுகரையோரப்பகுதியில் தொழில்புரிவதைநிறுத்தி இத்தொழிலுக்கெனகுறித்தொதுக்கப்பட்டபகுதியில் தொழில் புரிவதைஉறுதிப்படுத்தல்.
அனர்த்தத்தின் போதுபாதிக்கப்படும் மீனவர்களுக்கான இழப்பீடு
01. கடந்தகாலங்களில் இயற்கைஅனர்த்தங்களின் போதுஎமதுமீனவர்கள் தங்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளனர். மேலும் கடல்சீற்றம் காலநிலைமாற்றம் எனபலமாதங்கள் தொழில் இன்றிதமதுவாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இவர்களின் பெயர்கள் தகவலாகதிரட்டப்படுகின்றன. ஆனால் கொடுப்பனவுகள் ஏதும் வழங்கப்படுவதில்லை.
எரிபொருள் மானியமுத்திரைநிறுத்தத்தின் தாக்கம்
16.02.2012 தொடக்கம் மீனவர்களுக்குவழங்கப்பட்டுவரும் எரிபொருள் மானியம் இவ்வருட இறுதிக்குள் நிறுத்தப்பட்டு இவ் இழப்புக்குபதிலாகவலைகள் வழங்கப்படவுள்ளதாகஅறிகின்றோம். இது மீனவசர்களுக்குஎந்தவகையிலும் அவர்களது இழப்பைஈடுசெய்யக்கூடியதாக இல்லை இன்றுவரை இம்மீனவர்கள் தொழில் ரீதியில் உயர்வடையவும் இல்லை இவ்உபகரணஙகள் வழங்கப்படுவதால் அவர்களதுவாழ்வாதாரமும் உயர்வடைவதாகவும் இல்லை இம் மீனவர்கள் இவ் உபகரணங்களுக்கு பதிலாகதொடர்ந்துஎரிபொருள் மானியத்தைவழங்குமாறுஅல்லதுஎரிபொருளுக்குவிலைகுறைப்புசெய்யுமாறும் கோரிநிற்கின்றனர்.
இவ்வாறானபிரச்சினைகள் தொடர்ந்துவருவதால் இம் மீனவர்கள் கடன் சுமைக்கும் வறுமைக்கும் சிக்குண்டுதங்கள் தொழில்களைகைவிட்டுதங்களதுஉயிர்களைமாய்க்கவும் அல்லதுநாட்டைவிட்டு அயல் நாட்டுக்கு இடம்பெயர்ந்துசெல்லவும் வழிவகுக்கின்றது.எனவே இவர்களின் இந் நியாயமானகோரிக்கைக்குதீர்வினைவழங்குமாறுமன்னார் மாவட்டமீனவசமூகம் சார்பாககேட்டுநிற்கின்றோம்.
நன்றி
தலைவர்
மன்னார் மாவட்டமீனவ கூட்டுறவுசங்கங்களின் சமாசம்
பிரதிகள்
1. கௌரவத்துக்குரியஊ.ஏவிக்னேஸ்வரன் வடமாகணமுதலமைச்சர்.
2. கௌரவபா. டெனிஸ்வரன் வடமாகணமீன்பிடி,போக்குவரத்துகிராமஅபிவிருத்திஅமைச்சர்.
3. உதவிகடற்தொழில் பணிப்பாளர் கடற்தொழில் திணைக்களம் மன்னார்.
4. கூட்டுறவுஅபிவிருத்திஉதவிஆணையாளர் கூட்டுறவுதிணைக்களம் மன்னார்.
5. அமைப்பாளர் தேசியமீனவர் ஒத்துழைப்புபேரவைநீர்கொழும்பு.
6. அனைத்துஊடகவியலாளர்கள் மன்னார் மாவட்டம்.
உலக மீனவர் தினத்தன்று மன்னார் மீனவர்கள் பணிபகிஸ்கரிப்பு : பிரச்சினைகள் தொடர்பான மகஜர் மன்னார் மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிப்பு -படங்கள்
Reviewed by Author
on
November 21, 2013
Rating:
No comments:
Post a Comment