இன்றைய விம்பம் பகுதியில் மன்னாரில் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை தொடர்பான தகவல்களும் படங்களும்
சமீப காலமாக மன்னார் மாவட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
மன்னாருக்கு வரும் குறித்த உல்லாச பயணிகள் மன்னாரின் பிரபல்யமான சுற்றுலா தளங்களை பார்வையிட்டு செல்கின்றனர்.
குறிப்பான மன்னாரின் பிரசித்திபெற்ற சுற்றுலா தளங்களான பல்லிமுனை பெருக்கம் மரம்,அல்லிராணி கோட்டை,தொங்கு பாலம் ,தேக்கம், தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து ராமர்பாலம் என்றழைக்கப்படம் மண்திட்டியின் இரண்டாம் திட்டியிற்கான கடல் சுற்றுலா என பல்வேறுபட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இதேவேளை மன்னாரின் கடற்கரைகளிலும் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு தமது சுற்றுலாவினை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் மன்னார் பகுதியில் அழகான கடல்கள் இருந்த போதிலும் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் எந்த ஒரு கடற்பகுதிகளும் இல்லாத நிலை காணப்படுகிறது.
அதற்கு காரணம் இவ்வாறான கடற்கரைகளை இனம் கண்டு அவற்றை அபிவிருத்தி செய்யக்கூடிய எந்த ஒரு நடவடிக்கைகளும் இங்கு எடுக்கப்படவில்லை
குறிப்பாக மன்னாhருக்கான சுற்றுலாவினை மேற்கொள்ளும் உல்லாச பயணிகள் மன்னாரில் பிரதானமாக கடல் சார்ந்த விடயங்கள் அதிகமாக காணப்படும் என்றே இங்கு வருகின்றனர் ஆனால் அது அவர்களுக்க ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
பல மாவட்டங்களில் உல்லாச பயணிகளுக்கென கடற்கரைகள் இனம்காணப்பட்டு அவற்றை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து உல்லாச பயணிகளை கவரக்குடிய வகையில் காணப்படுகிறது.
அதில் யாழ்ப்பாணம்,மட்டக்கிளப்பு போன்ற மாவட்டங்களை குறிப்பிடலாம்
எனவே மன்னார் மாவட்டம் வளர்ந்திட பலதுறைகள் இருக்கின்ற போதிலும் அதில் ஒன்றாக குறித்த சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வருகையிலான திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இன்றைய விம்பம் பகுதியில் மன்னாரில் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை தொடர்பான தகவல்களும் படங்களும்
Reviewed by Author
on
December 15, 2013
Rating:
Reviewed by Author
on
December 15, 2013
Rating:












No comments:
Post a Comment