மன்னாரில் வீதி விபத்தில் இராணுவ வீரர் பலி, இருவர் காயம்!
மன்னார் மாந்தை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் கெப் வாகனத்தை செலுத்தி வந்த இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பெரிய மடுவில் இருந்து மன்னாருக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும்,தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து மாந்தை வீதியூடாக சென்று கொண்டிருந்த இராணுவ கெப் ரக வாகனமும் நேருக்குநேர் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த வாகனத்தில் இருந்த மேலும் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் வீதி விபத்தில் இராணுவ வீரர் பலி, இருவர் காயம்!
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:






No comments:
Post a Comment