கிளிநொச்சியில் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் ஆரம்பம்
கிளிநொச்சி, முரசுமோட்டை கிராமத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தின் ஆரம்பநாள் நிகழ்வு இன்று (17) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கண்டாவளைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி முரசுமோட்டை அ.த.க. பாடசாலை மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
இவ்வேலைத்திட்டத்தில் சிரமதான வேலைத்திட்டங்களில் ஈடுபடுதல், சினேகபூர்வ விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல், கிராம மக்களின் வாழ்வாதாரம் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.
இப்பரிமாற்ற வேலைத்திட்டத்தில் கண்டி மாவட்டத்திலிருந்து வருகை தந்துள்ள இளைஞர்கள் யுவதிகள் ஈடுபடவுள்ளனர்.
கிளிநொச்சியில் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் ஆரம்பம்
Reviewed by Admin
on
December 18, 2013
Rating:
Reviewed by Admin
on
December 18, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment