அண்மைய செய்திகள்

recent
-

பங்களாதேஷில் பஸ் ஆற்றில் வீழ்ந்து விபத்து: 16 பேர் உயிரிழப்பு

 பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் உள்ள தௌலதியா முனையத்தில் பேருந்து ஒன்று பத்மா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

இந்த விபத்தில் மேலும் பலரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

தற்போது பாரந்தூக்கியின் உதவியுடன் பேருந்து கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பேருந்துக்குள் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

 

நேற்று (25) நள்ளிரவு இடம்பெற்ற இந்த விபத்தை அடுத்து, ஆற்றில் இருந்து மேலும் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

பங்களாதேஷின் தலைநகர் டாக்கா நோக்கிப் பயணித்த இந்தப் பேருந்தில் சிறுவர்கள் உட்பட சுமார் 40 பயணிகள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.







பங்களாதேஷில் பஸ் ஆற்றில் வீழ்ந்து விபத்து: 16 பேர் உயிரிழப்பு Reviewed by Vijithan on March 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.