அண்மைய செய்திகள்

recent
-

வெளியேற்றப்பட்ட நிலையில் வாழும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நிறைவு பெற்றுள்ளதாக கூறி உரிமைகளை பறிக்க முயல்வது அனுமதிக்க முடியாது - றிப்கான் பதியுதீன்

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுக்கின்ற போதெல்லாம் அதற்கெதிரான செயற்பாடுகளை இனவாத கும்பல்கள் முன்னெடுக்கும் நிலையில் வெளியேற்றப்பட்ட நிலையில் வாழும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நிறைவு பெற்றுள்ளதாக கூறி இம்மக்களது உரிமைகளை பறிக்க முயல்வது அனுமதிக்க முடியாது என்று வட மாகாண சபையின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் சபையில் தெரிவித்துள்ளார். 

சபை தவிசாளர் கந்தையா சிவஞானம் தலைமையில் அமர்வுகள் இடம் பெற்றது.நேற்றைய மாகாண சபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கஜதீபன் உரையாற்றும் போது முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கருத்துக்களை முன் வைத்த போது,எதிர்கட்சி உறுப்பினர் றிப்கான் அவரது உரைக்கு பதிலளித்த போது,பொன்தீவு கண்டலில் முஸ்லிம்கள் மீள்குடியேறவந்த போது,அதனை தடுப்பதற்காக பிரதேச செயலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அதே போல் மன்னாரிலும் இப்போக்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது

.இந்த நிலையில் முடிவுறாத முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முடிவுற்றதாக காட்டி மேலும் அவர்களை மாவட்டத்தில் மீளகுகுடியமர விடாத பணிகளாக இந்த பேச்சினை தான் பார்க்கின்றேன். வெளியேற்ற மாணவர்களின் கல்வி தொடர்பில் அக்கறை செலுத்தினால் அதனையும் இனவாதமாக பார்க்கும் நிலையினை இந்த சபையில் ஆற்றிய உரையில் இருந்து அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம். அதே வேளை இந்த சபையில் ஜனாதிபதி,மற்றுமு் தற்போது ஆளுநர் தொடர்பில் தேவையற்ற விடயங்கள் பேசப்படுவதை அவைத் தலைவர் தடுப்பதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் றிப்கான் பதியுதீன் சபையில் கூறினார் இன்றும் வடமாகாண சபைக்கான வரவு-செலவு திட்ட குழு நிலை விவாதம் இடம் பெறுகின்றது
வெளியேற்றப்பட்ட நிலையில் வாழும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நிறைவு பெற்றுள்ளதாக கூறி உரிமைகளை பறிக்க முயல்வது அனுமதிக்க முடியாது - றிப்கான் பதியுதீன் Reviewed by Admin on December 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.