டைம் இதழ் 2013–ம் ஆண்டின் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு
டைம் இதழின் 2013ம் ஆண்டின் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு
செய்யப்பட்டுள்ளார். டைம் பத்திரிகை சார்பில் சிறந்த மனிதர் விருது பெறும் 3-வது
போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆவார் நியூயார்க்கில் இருந்து வெளிவரும் ‘டைம்’ பத்திரிகை
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிந்து பிரபலமானவர்களை தேர்வு செய்து வருகிறது.
டைம் பத்திரிகை வாசகர்கள் வாக்களித்து சிறந்த மனிதரை தேர்வு செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டில் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
“சர்வதேச அளவில் பெருமை வாய்ந்த ஒரு பத்திரிகை அவரை சிறந்த மனிதராக தேர்வு
செய்து இருப்பது பெருமை அளிக்கிறது. என்று வத்திக்கான் செய்தி தொடர்பாளர் மகிழ்ச்சி
தெரிவித்துள்ளார்.
புனிதமாகவும், மத நம்பிக்கையுடனும் இருந்து அமைதிக்கும், சிறந்த
நீதிக்காகவும் பாடுபடும் ஒரு மனிதருக்கு கிடைத்த சிறந்த விருதாக இதை கருதுகிறோம்”
என்றும் அவர் கூறியுள்ளார்.
போப் ஆண்டவராக பிரான்சிஸ் பதவி ஏற்ற கடந்த 9 மாதத்தில் அமைதிக்காக அவர் ஆற்றும்
தொண்டுக்காகவும், இளைஞர்கள் பலரை நல்வழியில் மாற்றும் சக்தியாக விளங்குகிறார்
என்பதாலும் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டைம் பத்திரிகை
தெரிவித்துள்ளது.
டைம் பத்திரிகை சார்பில் சிறந்த மனிதர் விருது பெறும் 3-வது போப் ஆண்டவர்
பிரான்சிஸ் ஆவார். இதற்கு முன் 1994-ம் ஆண்டில் போப் ஜான் பால், 1962-ல் 23-ம் போப்
ஜானும் டைம் பத்திரிகையின் சிறந்த மனிதர் விருது பெற்றுள்ளனர்.
டைம் இதழ் 2013–ம் ஆண்டின் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு
Reviewed by Author
on
December 12, 2013
Rating:
Reviewed by Author
on
December 12, 2013
Rating:


No comments:
Post a Comment