அண்மைய செய்திகள்

recent
-

அடிப்­படை வச­திகள் கிடைக்­கா­மையால் நாயாறு கிரா­மத்தில் மக்கள் அசௌ­க­ரியம்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குட்பட்ட நாயாறு கிராமத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் குடியிருப்பு வீடுகள் , குடிநீர் , போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் . யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு நாயாறு கிராமத்தில் சுமார் 81 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன .

 இந்நிலையில் இம்மக்களுக்கு இன்னமும் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை . இதேவேளை , இக் குடும்பங்களில் 14 குடும்பங்களுக்கு இன்னமும் தற்காலிக வீடுகள் கூட அமைத்துக்கொடுக்கப்படவில்லை . இப்பகுதியில் யுத்தத்தால் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட வீடுகள் மட்டும் யு 27 வீடுகளில் 21 . என் . ஹபிற்ரட் நிறுவனத்தினால் பகுதியளவில் ஏனையவர்கள் வீடுகள் இன்றி பாதிப்படைந்துள்ளனர் . 

 இதேவேளை , இப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு மின்சாரம் , குடிநீர் , கிணறுகள் , மலசலகூடங்கள் போன்ற அடிப்படை வசதிகளும் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை . இங்கு வீதிகளும் இன்னமும் குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றன . இம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் இன்னமும் உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை . 

சமுர்த்தி வங்கி , ஆரம்பசுகாதார நிலையம் போன்ற வசதிகள் இன்மையாலும் இம்மக்கள் தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் . எனவே , தமது நிலையினை அதிகாரிகள் கருத்திலெடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
அடிப்­படை வச­திகள் கிடைக்­கா­மையால் நாயாறு கிரா­மத்தில் மக்கள் அசௌ­க­ரியம். Reviewed by Admin on December 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.