அண்மைய செய்திகள்

  
-

தரமற்ற உணவு விற்பனை நிலையங்களா? உடன் அழையுங்கள்

தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. 

 24 மணித்தியாலங்களும் முறைப்பாட்டை மேற்கொள்ளக் கூடிய வகையில் 3 விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி 011-3071073, 011-2676161, 011-2671977 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ய முடியும். 

 நாடு முழுவதிலுமுள்ள உணவு விற்பனை நிலையங்களை சோதனையிடவுள்ள சுகாதார அமைச்சினால் இந்த இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த சோதனை நடவடிக்கைகள் நாளை 23ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. 

 இதன்போது வெதுப்பகங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் மரக்கறி, பழங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட உணவு விற்பனை நிலையங்கள் யாவும் சோதனையிடப்படவுள்ளன.
தரமற்ற உணவு விற்பனை நிலையங்களா? உடன் அழையுங்கள் Reviewed by Admin on December 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.