தலைமன்னாரில் இலவச மருத்து முகாம். [படங்கள் இணைப்பு]
ஜமாத் இ இஸ்லாம் ' அமைப்பின் தலைமன்னார் பியர் கிளையின் ஏற்பாட்டில் இலவச
மருத்து முகாம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை ( 22.12.2013 ) இடம்பெற்றிருக்கின்றது .
தலைமன்னார் பகுதியில் வசிக்கும் மக்களின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு மேற்படி இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றிருக்கின்றது .
' சிராஜ் சர்ட்டி இன்டர்நஷனல் ' ஸ்தாபனத்தின் அணுசரணையுடன் ' ஜமாத் இ இஸ்லாம் ' அமைப்பின் தலைமன்னார் பியர் கிளை ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமினை இன்று காலை வடமாகாண சபையின் உறுப்பினரும் பிரதம கொறடாவுமான றிப்கான் பதியூதின் ஆரம்பித்து வைத்திருக்கின்றார் .
தலைமன்னார் பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்றிருக்கும் மேற்படி இலவச மருத்துவ முகாமில் இரத்தப்பரிசோதனை , ஈ.சி. ஜி மற்றும் பொது மருத்துவப்பரிசோதனை என்பன இடம்பெற்றிருக்கின்றன .
மேற்படி மருத்துவ முகாமில் வைத்தியர்களான கே . எம் . நிஷாத் மற்றும் ஏ . நியுஷ்சில்லா மற்றும் உதவியாளர்கள் கடமையாற்றியதாக ' ஜமாத் இ இஸ்லாம் ' அமைப்பின் தலைமன்னார் பியர் கிளையின் தலைவர் முஹமட் நஜிம் தெரிவித்திருக்கின்றார் .
தலைமன்னாரில் இலவச மருத்து முகாம். [படங்கள் இணைப்பு]
Reviewed by Admin
on
December 22, 2013
Rating:

No comments:
Post a Comment