விடுதலைசெய்த ஒருவரை மீண்டும் கைது செய்தது ஏன்?; உயர்நீதிமன்றம்
சட்ட மா அதிபரிடமே உயர் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலையைச் சேர்ந்த ஜோசப் அமலதாஸ் என்னும் கைதியின் மனுவை விசாரித்தபோதே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் பொலிஸார் தன்னைக் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்ததாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் ஒரு வருடகால புனர்வாழ்வு நடவடிக்கையின் பின்னர் 2012ஆம் ஆண்டு தான் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட தன்னை பொலிஸார் மீண்டும் கைது செய்து வழக்கு விசாரணை எதுவும் இன்றி தடுத்து வைத்திருப்பதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட ஒருவர் ஏன் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்று அரச தரப்பு சட்டத்தரணியிடம் கேள்வி எழுப்பியது.
அதேவேளை இந்தச் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவல் தன்னிடம் இல்லை என்று இன்னுமொரு கேள்விக்கு பதிலளித்த அசர சட்டத்தரணி தெரிவித்தார்.
வழக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்,இந்த மனுதாரர் மீண்டும் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை அன்றைய தினம் முன்வைக்குமாறு அசர சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுதலைசெய்த ஒருவரை மீண்டும் கைது செய்தது ஏன்?; உயர்நீதிமன்றம்
Reviewed by Author
on
December 13, 2013
Rating:
Reviewed by Author
on
December 13, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment