இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர் சேவையினூடாக மன்னார் பயனாளிகளுக்கு கண்சத்திர சிகிச்சை
கடந்த ஒக்டோபர் மாதம் 18ம் திகதி இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமில் கண்சிகிச்சையினை பெற்றுக்கொண்டோரில் ஒரு தொகையினர் சத்திரசிகிச்சைக்காக முதற்கட்டமாக சீதுவையில் உள்ள விஜயகுமாரத்துங்க நினைவு கண்சிகிச்சை வைத்தியசாலைக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் வேர்ல்ட் விஷன் மன்னார் ஆகியோரின் பங்களிப்பில் போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தி கொடுத்ததன் வாயிலாக மொத்தமாக 17 பேர் தமது பார்வைவிருத்தியினை பெற்று பயனடைந்தனர்.
இதற்கான முன்னாயத்தங்களானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் திரு. ஜெ ஜெ கெனடி அவர்களால் மன்னார் டிலாசால் அருட்சகோதரர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்துடன் முருங்கன் மாவட்ட வைத்தய அதிகாரி வைத்தியர் திரு. ஓஸ்மன் குலாஸ் அவர்கள் கண்சிகிச்சையினை பெற்றுக் கௌ;ள வேண்டியவர்களுடன் தொடர்பினை மேற்கொண்டு ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தார்.
நோயளிகள் முருங்கன் வைத்தயசலையில் இருந்து கடந்த டிசெம்பர் 2ம் திகதி அதிகாலை 5 மணிக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்களினால் பொறுப்பேற்கப்பட்டு காலை 11 மணியளவில் சீதுவையிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வைத்தியர்கள் அவர்களை பொறுப்பேற்று அவர்களுக்கான உணவு மற்றும் இதர சேவைகளை வழங்கினர்.
சிகிச்சையின் பின்னர் 17 பேரும் 4ம் திகதி காலை மு.ப 11 மணிக்கு மீண்டும் செஞ்சிலுவை சங்கத்தின் தொண்டர்களுக்கு கையளிக்கப்பட்டனர். சிகிச்சையினை பெற்றுக் கொண்டவர்கள் அன்று மாலை 5 மணியளவில் அதே போக்குவரத்து உதவி மூலமாக முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு வைத்தியர் திரு. ஓஸ்மன் குலாஸ் அவர்களிடம் கையளிக்கப்ட்டனர்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் திரு. ஜெ ஜெ கெனடி அவர்கள் இத்தகய கண்சிகிச்சையினை பெற்றுக்கொள்ள தவற விட்டவர்கள் மற்றும் பெற்று கொள்ளவேண்டியோருக்கு எதிர்வரும் காலத்திலும் மாவட்டத்தின் மக்கள் பயன்பெறும் வகையில் உதவுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திதரவுள்ளதாக தனது கருத்தினை தெரிவித்ததுடன் நோயாளர்களை கண்காணித்த தொண்டர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.
பயனாளிகளின் விபரம்
No. Name M/F Age
01. JR Agnas Suvarna F 30
02. M. Sebamalai F 66
03. V. Annalaxmy F 59
04. M. Loorthamma F 58
05. M. Sevathy Amma F 70
06. Nadarasa M 58
07. J. Jesuthas M 46
08. N. Thommai M 80
09. S. Richard M 24
10. M. Ponnuthurai M 69
11. Suman M 25
12. S. Nimal M 40
13. A. Sebamalai M 67
No. Name M/F Age
14. T. Sakayanathan Peris M 54
15. K. retnasingham M 37
16. P. Velayutham M 60
17. P. Thulasithas M 68
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர் சேவையினூடாக மன்னார் பயனாளிகளுக்கு கண்சத்திர சிகிச்சை
Reviewed by Admin
on
December 13, 2013
Rating:
Reviewed by Admin
on
December 13, 2013
Rating:



.jpg)










No comments:
Post a Comment