அண்மைய செய்திகள்

recent
-

நடவடிக்கை எடுக்காவிடின் வெளிநாட்டு தலையீடு ஏற்படும்: கத்தோலிக்க திருச்சபை

நல்லிணக்கத்தை நோக்கி அரசாங்கம் செயற்படாமலும் சண்டையின்போது நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுகளையிட்டு நடவடிக்கை எடுக்காமலும் விடுமாயின் வெளிநாட்டு தலையீடு ஏற்படுமென கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

நேற்று  காலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு ஆயரான மல்கம் ரஞ்சித், தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பிரதான தமிழ்க் கட்சியையும் ஒரு அரசியல் தீர்வை உருவாக்குமாறு வலியுறுத்துவதாகவும் தவறும் பட்சத்தில் ஒரு சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்கும் ஆபத்து உள்ளதென எச்சரிப்பதாகவும் கூறினார்.

வெளிநாட்டவர்கள் எமக்கு எனன செய்ய வேண்டுமென சொல்ல வரக்கூடாது நாம் முட்டாள் கூட்டமல்ல என கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறினார்.

ஆனால், நாம் இந்த பிரச்சினைகளை தீர்க்காது விடுவோமானயின் நாம் வெளிநாட்டு தலையீட்டுக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் கூறினார்.

2009 இல் போரில் இறுதிக்கட்டத்தில் 40,000 வரையிலான தமிழ் பொதுமக்கள் பாதுகாப்பு படைகளினால் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்கும்படி விடப்படும் சர்வதேச கோரிக்கைகளை இலங்கை தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றது.

நடவடிக்கை எடுக்காவிடின் வெளிநாட்டு தலையீடு ஏற்படும்: கத்தோலிக்க திருச்சபை Reviewed by Author on December 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.