அண்மைய செய்திகள்

recent
-

பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு மனு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணிகளான நா.ராஜாராமன், இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைச்செல்வன் ஆகியோரே ஜனாதிபதி அலுவலகத்தில் மறுபரிசீலனை மனுவை கையளித்துள்ளனர்.

அம்மனுவில்,   ''ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலம் திருத்தப்பட்டது என விசாரணை அதிகாரியான தியாகராஜன் சமீபத்தில் கூறியிருக்கிறார். 

இதனை கருத்தில் கொண்டு ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டிருக்கும் அவரது கருணை மனுவின் மீது மறுபரிசீலனை மேற்கொண்டு பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்''என்று கூறப்பட்டுள்ளது.
பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு மனு Reviewed by Author on December 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.