அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பு-ஆளுநருக்கு இடையிலான பிரச்சினையை பேசி தீர்க்கவேண்டும்: விக்னேஷ்வரன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழிருக்கின்ற வடமாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிரிக்கும் இடையே உண்டாகியுள்ள மோதலை பேச்சுவார்த்தையினால் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று கலாநிதி கே.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

கலாநிதி கே.விக்னேஷ்வரன், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ஏ.வரதராஜபெருமாள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் ஆகிய இருவருக்கும் ஆலோசகராக பணியாற்றியவராவார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வரதராஜ பெருமாளுடன் நான் பணியாற்றும் போது, அப்போதிருந்த ஆளுநர் ஜெனரல் நளினி செனவிரத்னவுடன் கலந்துபேசி பல காரியங்களை நிறைவேற்றி கொண்டேன். அதேபோலவே முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனும் ஆளுநர் வைஸ் அட்மிரல் மோகன் விஜேவிக்ரமவுடன் கலந்து பேசி பல காரியங்களை நிறைவேற்றினார்' என்றார்

13 ஆவது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்த ஏற்படுத்திய அரசியலமைப்பின் மாகாண சட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்கள்,ஆளுநரின் அதிகாரத்திற்கு மட்டுமே உட்பட்டவர்கள் என்று தெளிவாக கூறுகின்றது. ஆனாலும், ஆளுநருடன் தொடர்பு ஏற்படுத்தி அவரை சந்தித்து இணக்கம் கண்டு தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் சாத்தியம் உண்டு என்றும் அவர் கூறினார்.

'ஆனாலும், தற்போதைய வடமாகாண முதலமைச்சரும், ஆட்சியிலிருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் புலம்பெயர் புலிகள் ஆதரவாளர்கள் தூண்டுதலால் வடமாகாண ஆளுநருடனும், மத்திய அரசுடனும் மோதல் நிலையை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்கள்' என்றும் அவர் கூறினார்.

கூட்டமைப்பு-ஆளுநருக்கு இடையிலான பிரச்சினையை பேசி தீர்க்கவேண்டும்: விக்னேஷ்வரன் Reviewed by Author on December 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.