அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம், சிங்கள மக்களையும் வடக்கில் குடியேற்ற வேண்டும்: டக்ளஸ்

வடக்கிலிருந்து இன்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட  முஸ்லிம் மற்றும்  சிங்கள மக்களையும் அவரவர் இருந்த இடங்களில் மீளக்குடியேற்றி  அவர்களும் வாழ வழிசமைக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் அமைச்சருமான அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பம்பலப்பிட்டியுள்ள  ஹோட்டலொன்றில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,


"20 வருடங்களுக்கு முன் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட  முஸ்லிம் மற்றும்  சிங்கள மக்கள் அவரவர் இடங்களுக்குச்சென்று மீள குடியேறி வாழ வேண்டும். அதற்கு வழிசமைத்து கொடுக்கப்படவேண்டும். 

தெஹிவளைப் பகுதிகளில் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு தடை விதித்தது பற்றியும் இந்து கோவில்களில் இடம்பெறும் கொள்ளைகள் பற்றியும் விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் பொலிஸாரிடம் கேட்டுகொண்டுளோம் என்றும் அவர் சொன்னார்.

மாகாணசபை அதிகாரம் சம்பந்தமாக ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸூம்  ஏனைய தமிழ் கட்சிகளும் உள்வாங்கப்படல் வேண்டும். அரசில் பங்காளியாக நாங்கள் இருப்பது போன்று வடக்கு மாகாணசபையுடன் இணக்கப்பாட்டுடன் செயல்பட தயாராக இருக்கின்றோம். 

அதற்காக. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேசக் கரம் கூப்பி அழைக்கின்றோம்.யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட  அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் தலைவராக நான் இருக்கின்றேன். மாவட்ட அபிவிருத்தி குழுக்களில் அந்தந்த மாகாணசபை முதலமைச்சரும் இணைத் தலைவராக உள்ளனர். இது தான் ஏனைய மாகாண சபைகளின் நியதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சருக்கு அரசாங்க அதிபர் அழைப்பு விடுத்தும் முதலமைச்சர் அதில் கலந்து கொள்ள வில்லை. எதிர்வரும் காலத்திலாவது முதலமைச்சர் கலந்து கொண்டு இம்மாகாணசபையை இன்னும் வழுவுள்ளதாக்குவதற்காக கைகோர்க்குமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

கூட்டமைப்பினர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதன் மூலம் பேச்சுவார்த்தையின் ஊடாக பிரச்சினைகளுக்கு  தீர்வு காணப்படல்வேண்டும். அந்த குழுவில் எட்டப்படுகின்ற தீர்வை தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வழங்குவதற்கு தயாராக உள்ளார். இத் தீர்வுத் திட்டம் இன்னும் 6 மாதகாலத்திற்குள் தயார்படுத்தப்பட்டுவிடும். 

வடக்கு மாகாணசபை என்பது எமது கட்சியின் கனவின் ஒரு நனவாகும். அதற்குரிய அதிகாரங்கள் பற்றி நாம் வட மாகாண ஆளுநருடன் கலந்து ஆலோசித்து சினேகபூர்வமானதானதொரு  ஆட்சியை நாம் வடக்கில் முன்னெடுத்து செல்ல வேண்டும். வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்கள் குறித்து பேசுவதற்கு வடமாகாண ஆளுநர் வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். 

இது பற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரிடமிருந்து எவ்வித பதிலும் இதுவரையிலும் அனுப்பப்படவில்லை.
2014ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில்  வட மாகாண அபிவிருத்திக்காக 5 பில்லியன் ரூபா அரசினால் ஓதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மேல் மாகாணத்திற்கு 2 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. 

அரசு கூட வடமாகாணசபையுடன் இணைந்து ஏனைய மாகாணங்களை போல வடக்கையும் சம அந்தஸ்த்தில் அபிவிருத்தியை செய்வதற்கே விரும்புகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  ஒரு விடாப்பிடியாக செயலாற்றுகின்றனர்.
அண்மையில் பிரித்தானிய பிரதமர் கமரோன் யாழ். வந்திருந்தார். 

அவர் வந்ததை விடவும் இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தால் எமது தமிழ் மக்களுக்கு ஒரு பாரியதொரு வழுவாக அமைந்திருக்கும்.  என அமைச்சர் டக்லஸ் தேவானாந்த தெரிவித்தார். இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதொரு திட்டமாகுமாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம், சிங்கள மக்களையும் வடக்கில் குடியேற்ற வேண்டும்: டக்ளஸ் Reviewed by Author on December 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.