இலங்கைக்கு எதிராக ஐநாவில் மூன்றாவது பிரேரணை கொண்டுவர வாய்ப்புக்கள் அதிகம்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்தக் கோரிக்கைக்கு இலங்கை கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர், ஐக்கிய நாடுகள் இடம்பெயர் மக்களுக்கான பிரதிநிதி போன்றோரின் இலங்கை விஜயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியின் நிலுவையில் உள்ள விஜயம் உள்ளிட்ட ஏனைய நிலுவையில் உள்ள ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் இலங்கை விஜயக் கோரிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான பௌதீக புனர்நிர்மாணப் பணிகளில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளமை வரவேற்கப்பட வேண்டியவை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எதிவரும் வருடம் மார்ச் மாதம் கூடும் ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கை முக்கிய இடம் வகிக்கும் எனவும் மனித உரிமை, பொறுப்பு மற்றும் தமிழ் சிறுபான்மையினரின் சமரசம் தொடர்பில் இலங்கை மீது மூன்றாவது பிரேரணை கொண்டுவர வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கண்ணி வெடி அகழ்வு மற்றும் வீட்டு நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட இலங்கை முனைப்பு காட்ட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், ஜனநாயகத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட காரணிகளில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐநாவில் மூன்றாவது பிரேரணை கொண்டுவர வாய்ப்புக்கள் அதிகம்
Reviewed by Author
on
December 11, 2013
Rating:
Reviewed by Author
on
December 11, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment