அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சர்வமத மற்றும் இன பன்மைத்துவத்தினூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான ஆரம்ப செயலமர்வு -படங்கள்


மன்னார் சமாதானத்திற்கும் மீள் இனக்கத்திற்குமான வளங்கள் (ஆர்.பி.ஆர்) அமைப்பின் ஏற்பாட்டில் சர்வமத மற்றும் இன பன்மைத்துவத்தினூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான ஆரம்ப செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் ஆகாஸ் விடுதியில் இடம் பெற்றது.

குறித்த செயலமர்வுக்கு தேசிய சமாதான பேரவை அனுசரனை வழங்கியது.இதன் போது மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தலைவர்கள் உள்ளிட்ட 30 பேர் கலந்த கொண்டனர்.

இந்த செயலமர்விற்கு தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பளர் ஜெஹான் பெரேரா, உதவி நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சமன் செனவிரட்ன, ஆர்.பி.ஆர்.அமைப்பின் தலைவர் சட்டத்தரணி எம்.எம்.சபூறுதீன், ஆர்.பி.ஆர்.அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் செல்வானந்த ராஜன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

-இதன் போது குறித்த செயலமர்வில் மன்னார் மாவட்ட சர்வ மத பேரவைக்கு இணைத்தலைவர்களாக அருட்பணி தமிழ் நேசன் அடிகளார்,சிவ சிறி தர்மகுமார குருக்கள்,அஸ்சொய்க் எஸ்.ஏ.அசீம் மௌவி,வண.விமலரத்ன தேரர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


















மன்னாரில் சர்வமத மற்றும் இன பன்மைத்துவத்தினூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான ஆரம்ப செயலமர்வு -படங்கள் Reviewed by Author on December 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.