யாழில் இளைஞரின் சடலம் மீட்பு
யாழ். நாவலர் வீதியிலுள்ள உயர் கற்கைநெறிகள் நிறுவனத்தின் கட்டிடத்தொகுதியிலிருந்து அண்ணா வீதி வவுனியாவைச் சேர்ந்த லெனின் ரூக்ஷன் (வயது 26) என்பவர் சடலமாக மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமந்தையிலிருந்து பளைவரையான ரயில் பாதை அமைக்கும் நிறுவனமொன்றின் அலுவலக உதவியாளராக கடமையாற்றிவந்த இவர் மேற்படி கட்டிடத்தொகுதியில் தங்கி வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மேற்படி கட்டிடத்தொகுதியில் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
குறித்த இளைஞரின் அறை எரியூட்டப்பட்டிருந்தது. மதுபோதையில் காணப்பட்ட இவர் தனது அறையிலிருந்த பொருட்களை எரியூட்டிவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் மு.திருநாவுக்கரசு சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்கு சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
யாழில் இளைஞரின் சடலம் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
February 26, 2014
Rating:
(8)(1)(4)(1)(3)(3)(3)(1)(2)(3)(1)(1).jpg)
No comments:
Post a Comment