மன்னார் பொலிசாரின் ஏற்பாட்டில் நடை பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டி - படங்கள்
மன்னார், வவுனியா பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்கிரம சிங்க அவர்களின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முகமாக சனிக்கிழமை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் கிரிக்கட் சுற்றுப்போட்டி இடம் பெற்றது.
குறித்த கிரிக்கட் சுற்றுப்போட்டி சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
முதல் சுற்று மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி அணிக்கும்,மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியபாடசாலை அணிகளுக்குமிடையில் இடம் பெற்றது.
மன்னார் பொலிசாரின் ஏற்பாட்டில் நடை பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டி - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 09, 2014
Rating:

No comments:
Post a Comment