சிறுவர் நாடக போட்டியில் மாகாண,தேசிய மட்டத்தில் 1ம் 3ம் இடங்களை தன் வசப்படுத்தியிருக்கிறது மன்னார் மாவட்டம்
தேசிய மட்ட சிறுவர் நாடக போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் மாகாண ரீதியில் முதலாம் இடத்தையும் மன்னார் பெற்றிருக்கின்றது.
இம்மாதம் முதலாம் திகதி (01.02.2014) கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்ட சிறுவர் நாடக போட்டியில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 16 சிறுவர் கழகங்கள் பங்கு பற்றியிருக்கின்றன.
இந்நிலையில் மன்னார் மாவட்டத்திலிருந்து மூன்றாம்பிட்டி சிறுவர் கழகம் மேற்படி போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பெற்றிருக்கின்றது.
அதே வேளை வட மாகாண ரீதியில் முதல் இடத்தை பெற்றிருக்கின்றது.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் அமைந்திருக்கும் மூன்றாம்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 13-15 வயதிற்கு உற்பட்ட மாணவர்கள் இதில் பங்குபற்றிருக்கின்றனர்.
மன்னார் மாவட்ட செயலகத்தின் சிறுவர் பெண்கள் அபிவிருத்திப் பிரிவுவின் அனுசரனையுடன் மூன்றாம்பிட்டி சிறுவர் கழகம் மேற்படி நாடகப்போட்டியில் கலந்து கொணடு இரண்டு விருதுகளை பெற்றிருக்கின்றது.
சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த ஒப்பனை, உடை அலங்கார த்திற்காகவே மேற்படி இரண்டு விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
சிறுவர் நாடக போட்டியில் மாகாண,தேசிய மட்டத்தில் 1ம் 3ம் இடங்களை தன் வசப்படுத்தியிருக்கிறது மன்னார் மாவட்டம்
Reviewed by NEWMANNAR
on
February 09, 2014
Rating:

No comments:
Post a Comment