செருப்பால் அடித்ததால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திக் கொலை செய்தோம் – ஒப்புதல் வாக்குமூலம்
செருப்பால் அடித்த காரணத்தால் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததாக பொலிஸாரிடம் சந்தேகநபர்கள் இருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலைசெய்யப்பட்ட உமா மகேஸ்வரி என்பவர் ஒரு பொறியியலாளர் ஆவார்.இவரது சடலம் கடந்த 22ஆம் திகதி தமிழ்நாடு – காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவன வளாக எல்லையிலுள்ள முட்புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
உமா மகேஸ்வரி அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் முன்னர் ஒரு முறை உமா மகேஸ்வரியை கிண்டல் செய்தபோது அவர் செருப்பால் அடித்ததாகவும், பழிவாங்கும் நோக்கில் சிறிது நாட்கள் காத்திருந்து அவரைக் கொலை செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இந்த இருவரும் உமா மகேஸ்வரி வேலை செய்யும் பகுதிக்கு அருகில் உள்ள பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் நால்வர் தொடர்புபட்டுள்ள போதும், தற்போது இருவரை மட்டுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செருப்பால் அடித்ததால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திக் கொலை செய்தோம் – ஒப்புதல் வாக்குமூலம்
Reviewed by NEWMANNAR
on
February 26, 2014
Rating:

No comments:
Post a Comment