மதுபானசாலையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி எதிர்ப்பு பேரணி
மன்னார் பெரியகடை பகுதியில் கடந்த 6ம் திகதி முதல் இயங்கி வரும் மதுபானசாலையை குறித்த பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுமாறு குறித்த கிராம மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக எதிர்ப்பு பேரணி ஒன்றை இன்று காலை மன்னாரில் நடத்தியிருந்தனர்
குறித்த எதிர்ப்பு பேரணியை மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் பெரியகடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இன்று காலை உப்பள வீதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த எதிர்ப்புப் பேரணி ரெலிகொம் பிரதான வீதியூடாக சென்று பொலிஸ்நிலையத்தையடைந்தது.
இதன்போது மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி துஸார தளுவத்தவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது
அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எம் தேசபிரியவிடம் மகஜர் ஒன்றும் அதனை தொடர்ந்து மன்னார் பிரதேச செயலாளர் தயானந்த அவர்களிடம் மகஜர் ஒன்iறையும் அதனை தொடர்ந்து மன்னார் நகர சபை முதல்வர் ஞானபிரகாசம் அவர்களிடம் மகஜர் ஒன்றையும் அவர்களின் அலுவலகத்தில் வைத்து கையளித்தனர்.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளருடன் குறித்த மக்கள் குறித்த மது பானசாலையை வேறு இடத்திற்கு மாற்றுவற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டதோடு குறிப்பாக தற்பொழுது மதுபானசாலை அமைந்துள்ள பகுதியிலுள்ள பாடசாலை மாணவிகள் வெளிவகுப்புகளுக்கு சென்று மாலை வரும் போது குறித்த பகுதியிலுள்ள மதுபானசாலைக்கு வருபவர்கள் அப்பகுதியில் வீதியில் நின்று குடித்துவிட்டு குறித்த வீதியில் சிறுநீர் களித்து அசிங்கம் செய்வதோடு குறித்த பகுதியில் மதுபோதையில் சண்டையிலும் ஈடுபடுவதாக தெரிவித்ததுடன் இதனால் தாம் உளரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த பகுதியில் வசிப்பதற்கு பயமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்
இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட இப்பகுதி மக்கள் பல தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவித்த மக்கள் உடனே குறித்த மதுபானசாலையை குறித்த பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில் குறித்த மக்களின் கோரிக்;கைகளை கவனத்தில் எடுத்து கொண்ட பிரதேச செயலாளர் இவ் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்பவர்களில் பலர் குறித்த மதுபானசாலைக்கு செல்வது எனக்கு தெரியும் என்றார். பிரதேச செயலாளரின் பொறுப்பற்ற குறித்த பதிலுக்கு மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்ததோடு அதற்கு பதிலளித்த மக்கள் மதுபானசாலை வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதனை வேறு ஒரு இடத்திற்கு மற்றும்படிதான் கூறுகின்றோம் என தெரிவித்தனர்.
இந்நிலையில் அதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர் அப்படி என்றால் தகுந்த இடத்தை காட்டுங்கள் அப்பொழுது நீங்கள் காட்டும் பகுதிக்கு குறித்த மதுபானசாலையை மாற்றநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததோடு குறித்த செயற்ப்பாட்டிற்கு உங்களின் கையெழுதுக்கள் அடங்கிய ஆவணமும் இணைக்கப்பட்டுதரப்படவேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதேச செயலாளரின் கருத்திற்கு மக்கள் தமது எதிர்பினை தெரிவித்ததோடு பொறுப்பற்றமுறையில் இவ்வாறு தெரிவிக்காமல் உடனே குறித்த மதுபானசாலையை வேறுஇடத்திற்கு மாற்றுமாறு தெரிவித்தனர்.
இந்நிலையில் சற்றுநேரம் அமளிதுமளியாக காணப்பட்டது.இதனை அடுத்து மன்னார் பிரதேச செயலகத்திற்கு மன்னார் நகரசபை முதவ்வர் அழைக்கப்பட்டார்
இந்நிலையில் அங்குவந்த நகரசபை முதல்வர் மக்கள் மன்னார் நகரசபைதான் குறித்த மதுபானசாலைக்கான அனுமதியினை வழங்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர் ஆனால் அவ்வாறல்ல அதை பிரதேச செயலாளர்தான் வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.
இந்நிலையில் நகரசபையின் முதல்வர் தெரிவித்ததை ஏற்றுகொண்ட பிரதேச செயலாளர் குறித்த மதுபானசாலைக்கு அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில்தான் தான் அதை வழங்கியதாக தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் மன்னாரில் பல வீடுகளில் சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்கப்படுகிறது.அதை நிறுத்த பொலிஸ்சார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவேதான் குறித்த மதுபானசாலையை திறக்க தான் அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த கருத்திற்கு மக்கள் தமது கண்டனத்தையும் எதிர்பினையும் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகைதந்த மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரி மக்களுடன் பிரதேச செயலாளரின் கருத்திற்கு தனது எதிர்ப்pனை தெரிவித்ததோடு மன்னாரில் பொலிஸ்சாரின் செயற்பாடுகள் குறித்து பிரதேச செயலாளருக்கு விளக்கிக்கூறியதுடன் மக்களின் பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் மக்கள் கைதட்டி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.
குறித்த பேரணியில் சமூக செயற்பாட்டாளர் சாள்ஸ் நிமலநாதன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
அதன்பின் இங்கிருந்து பேரணியாக சென்று மன்னார்நகர முதல்வருக்கு தமது மகஜரை கையளித்தனர். பின் மக்களுடன் கலந்து ரையாடிய நகரமுதல்வர் குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Reviewed by Author
on
February 26, 2014
Rating:

No comments:
Post a Comment